AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த எளிய வீட்டு வைத்தியத்தை டிரை பண்ணுங்க

Oral Health Tips : வாய் துர்நாற்றம் ஒரு பொதுவான பிரச்னையாக மாறி வருகிறது. இது நம் மீது பிறருக்கு இருக்கும் நன்மதிப்பை குறைக்கிறது. இந்த பிரச்னையை எளிய வீட்டு வைத்திய முறையில் சரி செய்யலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த எளிய வீட்டு வைத்தியத்தை டிரை பண்ணுங்க
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 23:18 PM IST

வாய் துர்நாற்றம் (bad smell of mouth) என்பது பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பொதுவான பிரச்னையாகும். வாய்வழி சுகாதாரத்தில் சரியான கவனம் செலுத்தாதவர்கள் பொதுவாக இந்தப் பிரச்னையை அடிக்கடி சந்திக்கின்றனர். அருகில் அமர்ந்திருப்பவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள். ஏனென்றால் நாம் பேசும் போதெல்லாம், நம் வாயிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் அவர்களையும் பாதிக்கிறது. மேலும் சில நேரங்களில் வாய் துர்நாற்றம் குறித்து நமக்கு தெரிவிதில்லை.  இந்த நிலையில் பல் நிபுணர் (Dentist) டாக்டர் பிரவேஷ் மெஹ்ராவின் கூற்றுப்படி, மக்கள், சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இந்தப் பிரச்னையைப் புறக்கணிக்கிறார்கள். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால், வாய் துர்நாற்றம் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று டாக்டர் பிரவேஷ் மெஹ்ரா தெரிவிக்கிறார்.

துர்நாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்

  • பற்கள் மற்றும் நாக்கில் பாக்டீரியாக்கள் சேர்ந்து, துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
  • தண்ணீர் குறைவாகக் குடிப்பதால், வாயில் உமிழ்நீர் குறைவாக உற்பத்தியாகிறது, இதன் காரணமாக வாய் வறண்டு, துர்நாற்றம் அதிகரிக்கிறது.
  • சாப்பிட்ட பிறகு பற்களை சரியாக சுத்தம் செய்யாததால், பற்களில் சிக்கிய உணவு அழுகி, துர்நாற்றம் வீசுகிறது.
  • வெங்காயம், பூண்டு, மீன் போன்ற அதிகப்படியான காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருப்பது.
  • சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பது அல்லது வயிறு அல்லது செரிமான பிரச்சனைகள் இருப்பதும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க எளிதான வீட்டு வைத்தியம்.

வாய் துர்நாற்றம் ஒரு பெரிய நோய் அல்ல, ஆனால் அது உங்கள் நன்மதிப்பை பாதிக்கும். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், இந்தப் பிரச்னையிலிருந்து நீங்கள் முற்றிலுமாக விடுபடலாம்.

  • கிராம்புகளை லேசாக வறுத்து மென்று சாப்பிடுவதன் மூலம், வாய் சுத்தமாக இருக்கும்.
  • சிறிது நேரம் ஒரு துண்டு அதிமதுரத்தை வாயில் வைத்திருந்தால், உங்கள் மூச்சு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • கிரீன் டீ குடிக்கத் தொடங்குங்கள், அது செரிமானத்திற்கு உதவுகிறது.
  • உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகங்களை மென்று சாப்பிடுவது உணவின் மூலம் வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
  • வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும்.
  • தினமும் உங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள். இது நாக்கில் உள்ள துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.
  • நிறைய தண்ணீர் குடிக்கவும். இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது மற்றும் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாது.
  • துர்நாற்றத்தை உடனடியாக நீக்க விரும்பினால்,  ஏலக்காய்களை மெல்லுங்கள்.
  • உணவில் துளசி இலைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும். இதை தேநீர், தயிரில் கலந்து சாப்பிடலாம். அல்லது உலர்த்தி மென்று சாப்பிடவும்.
  • மிக முக்கியமாக, உங்கள் பற்களை முறையாகவும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

Follow Us