திருமணத்திற்கு நோ சொன்ன பெண்.. சுட்டுக் கொன்ற இளைஞர்.. ஹோட்டல் அறையில் சம்பவம்!

Bihar Crime News : பீகாரில் இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், பெண்ணை, இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற, அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண், இளைஞரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு நோ சொன்ன பெண்.. சுட்டுக் கொன்ற இளைஞர்.. ஹோட்டல் அறையில் சம்பவம்!

மாதிரிப்படம்

Updated On: 

26 Aug 2025 11:46 AM

பீகார், ஆகஸ்ட் 26 : பீகார் மாநிலத்தை இளம்பெண்ணை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளதால் ஆத்திரத்தில், பெண்ணை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு நன்றாக தெரிந்தவர்களே இந்த குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான காஜல். இவரை அப்பகுதியைச் சேர்ந்த ஜாக்கி என்பவர் காதலித்து வந்துள்ளார். முதலில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஜாக்கி தனது காதலை வெளிப்படுத்தினார்.

அதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் காஜலிடம் கூறி வந்துள்ளார். ஆனால், இதற்கு காஜல் மறுத்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காஜல் அவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். மேலும், இருவரும் பழகி வந்ததும் காஜலின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. அவர்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளனர். இதனால், திருமணம் செய்ய மாட்டேன் என ஜாக்கியிடம் காஜல் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று, இருவரும் ஒரு ஹோட்டல் அறையில் இருந்துள்ளனர்.

Also Read : மிரண்ட சென்னை விமான நிலையம்.. ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வந்த பெண்!

பெண்ணை சுட்டுக் கொன்ற இளைஞர்

அப்போது, ஜாக்கி மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காஜலிடம் கூறியிருக்கிறார். ஆனால், அப்போது அவர் மறுத்துள்ளார். இதனை அடுத்து, கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காஜலை அவர் சுட்டுக் கொன்றார். பின்னர், அவருக்கு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பெண்ணின் தாய் காயத்ரி தேவி கூறுகையில், “தனது மகள் ஒரு மாலில் வேலை செய்து வந்தார்.

Also Read : உஷார்.. ஷூவில் இருந்த பாம்பு.. கவனிக்காமல் அணிந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு அவரை மாலில் இறக்கிவிட்டேன். பின்னர், தனது மகள் ஒரு ஹோட்டல் அறையில் பல்லியாவைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஜாக்கி எனது மகளை திருமணம் செய்து கொள்ளுபடி கட்டாயப்படுத்தினார். ஜாக்கி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இதனால், எனது மகள் அவரை திருமணம் செய்ய பலமுறை மறுத்துள்ளார்என கூறினார்.