காதலை நிரூபிக்க இளைஞர் செய்த செயல்.. பறிபோன உயிர்.. நடந்தது என்ன?
Chattisgarh Crime News : சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலை நிரூபிக்க இளைஞர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், 13 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரிப்படம்
சத்தீஸ்கர், அக்டோபர் 12 : சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலை நிரூபிக்க இளைஞர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், 13 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான கிருஷ்ண குமார் பாண்டோ. இவருக்கு சோனோரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரைக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் இருவரும் சந்தித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, 2025 செப்டம்பர் 25ஆம் தேதி கிருஷ்ணகுமாரை காதலியின் பெற்றோர் போன் போட்டு வீட்டிற்கு வர கூறியுள்ளனர். கிருஷ்ணகுமாருடன் சோனோரி கிராமத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, இருவரின் காதல் பற்றி கேட்டுள்ளனர்.
காதலை நிரூபிக்க இளைஞர் செய்த செயல்
அப்போது, தனது காதல் உண்மை தான் என்பதை நிரூபிக்க கிருஷ்ணகுமாரை விஷத்தை குடிக்க சொல்லி காதலியின் பெற்றோர் கூறியுள்ளார். இதனை அடுத்து, கிருஷ்ணகுமாரும் அவர்கள் கொடுத்த விஷத்தை குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் கிருஷ்ணகுமார் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Also Read : பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை.. ஆப்கன் அமைச்சர் போட்ட உத்தரவு.. டெல்லியில் பரபரப்பு!
ஆனால், சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 13 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினர் அளித்த புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து, காதலியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?
முன்னதாக, இதுபோன்று உத்தர பிரதேச மாநிலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்த துக்கத்தில் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.