Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பானி பூரி சாப்பிட வாயை திறந்த பெண்.. மீண்டும் மூட முடியாமல் கடும் அவதி.. ஷாக் சம்பவம்!

Woman's Pani Puri Eating Becomes Nightmare | உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட வாயை திறந்துள்ளார். இந்த நிலையில், திறந்த வாயை மூட முடியாமல் அந்த பெண் கடும் சிரமத்தை சந்தித்துள்ளார். பிறகு மருத்துவர்களின் உதவியுடன் வாயை மூடியுள்ளார்.

பானி பூரி சாப்பிட வாயை திறந்த பெண்.. மீண்டும் மூட முடியாமல் கடும் அவதி.. ஷாக் சம்பவம்!
பாதிக்கப்பட்ட பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Dec 2025 15:15 PM IST

லக்னோ, டிசம்பர் 02 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஔரையா மாவட்டத்தில், திபியாபூர் பகுதியை சேர்ந்தவர் இன்கலா தேவி. 42 வயதாகும் இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயை திறந்த நிலையில், அதுவே அவருக்கு பெரிய தலை வலியாக மாறியுள்ளது. பானி பூரி சாப்பிட வேண்டும் என்றால் வாயை சற்று அகலமாக திறக்க வேண்டும். அவ்வாறு பானி பூரி சாப்பிட வாயை திறந்த அந்த பெண், மீண்டும் வாயை மூட முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

பானி பூரி சாப்பிட வாய் திறந்த பெண் – மூட முடியாமல் அவதி

வாயை மூட முடியாமல் தவித்த இன்கலா தேவியை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்கலா தேவி முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் அவரது தாடையை சரிசெய்து வாயை மூட முயன்றுள்ளனர். ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் அந்த பெண்ணை சிறப்பு சிகிச்சைக்காக சிச்சோலி மருத்துவக் கலூரி மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க : தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த ஓய்வு பெற்ற காவலர்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

மேல் சிகிச்சையில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த வாய்

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அந்த பெண் சிச்சோலி மருத்துவக் கலூரி மருத்துவமனைக்கு  சென்ற நிலையில், அவர்கள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அதிகமாக வாயை திறந்ததால் தாடை விலகி இருக்கலாம் என்றும், இதுபோன்ற நிலை சாப்பிடும்போது எதிர்பாராத விதமாக நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை.. ஷாக் சம்பவம்!

பிறகு மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணின் வாய் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நபர் ஒருவர் கொட்டாவி விடுவதற்காக வாயை திறந்த நிலையில், வாயை மூட முடியாமல் அவதிப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், தற்போது பானி பூரி சாப்பிட முயன்ற பெண் வாயை மூட முடியாமல் தவித்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.