Viral Video : கேதார்நாத்தில் ரூ.80 – 100 வரை விற்பனை செய்யப்படும் தண்ணீர்.. வியாபாரி விளக்கம்!

Kedarnath Water Bottle Price Explanation | கேதார்நாத்தில் தண்ணீர் பாட்டில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அங்கு ஏன் தண்ணீர் பாட்டில் அவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து அங்கு இருக்கும் வியாபாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Viral Video : கேதார்நாத்தில் ரூ.80 - 100 வரை விற்பனை செய்யப்படும் தண்ணீர்.. வியாபாரி விளக்கம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

25 Apr 2026 15:30 PM

 IST

பக்தர்களின் வருகைக்காக கேதார்நாத் கோயில் ஏப்ரல் 22, 2026 அன்று திறக்கப்பட்டது. அது முதலே ஏராளமான பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுவது, மலை ஏறுவதில் சந்திகும் சிக்கல், வரிசையில் நிற்கும்போது ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், கேதார்நாத்தில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் ஏன் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து கடைக்காரர் ஒருவர் விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேதார்நாத்தில் ரூ.80 – ரூ.100 வரை விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 22, 2026 அன்று பக்தர்கள் வருகைக்காக இந்த கோயில் திறக்கப்பட்டது. அது முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு படை எடுத்து வருகின்றனர். மிக முக்கிய புனித ஸ்தலமான கேதார்நாத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, சாதாரண தண்ணீர் பாட்டில்களை விடவும் மூன்று முதல் நான்கு மடங்கு விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கேதார்நாத் வரும் பக்தர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் காவலாளி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

கேதார்நாத்தில் உள்ள சிறிய கடை ஒன்றில் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில்களை ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த கடைக்காரர், ஒரு லோடு தண்ணீரை மேலே எடுத்து வருவதற்கு நாங்கள் ரூ.1,500 செலுத்துகிறோம். ஒரு ஆண்டில் 4 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே மக்கள் வருகை இருக்கும். சாலை வசதி இல்லை, டெலிவரி வசதி இல்லை, அதிக கட்டணம் ஆகியவை உள்ளன. அனைத்தும் கழுதைகள் மூலமே கொண்டுவரப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்