ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? ஏன் இது? வெளியான முக்கிய தகவல்கள்!
Operation Sindoor : சிந்தூர் என்றால் திருமணமான பெண்கள் நெற்றில் இடும் திலகம் என அர்த்தம். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பெண்களின் கணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், இளம்பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீர், மே 07 : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக, இந்தியா பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் ’சிந்தூர்’ (Operation Sindoor) என பெயரிடப்பட்டுள்ளது. 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளும் சேர்ந்த இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன?
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிடப்பட்டுள்ளது. சிந்தூர் என்றால் குங்குமம் என்று பொருள். பெண்கள் நெற்றில் வைக்கும் திலகத்தை (குங்குமம்) குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் ஆண்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, பஹல்காமில் சுற்றுலாவுக்கு புதுமண தம்பதிகள் பலரும் வந்திருந்தனர். அவர்களின் கணவரை குறிவைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால், பல இளம்பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
பெண்ணின் நெற்றில் குங்குமத்தை வைப்பது கணவர் அவரது வாழ்வில் இருப்பதைக் குறிக்கிறது. இது அந்தப் பெண் திருமணமானவள் என்பதையும், அவளுடைய கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது. திருமணமான இந்து பெண்களின் வாழ்க்கையில் குங்குமம் முக்கிய பங்காற்றி வருகிறது.
வெளியான முக்கிய தகவல்கள்
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
அதோடு இல்லாமல், சிந்தூர் என்பது போர்வீரனின் அடையாளமாகும். வீரர்கள் போருக்கு செல்லும்போது, தங்கள் நெற்றியில் சிந்தூரை பூசிக் கொள்வார்கள். தலை நிமிர்ந்து தையரித்துடன் நிற்பதை குறிக்கும் வகையில், போருக்கு செல்பவர்கள் குங்கமத்தை வைத்து கொள்வார்கள். இந்த குங்குமம் நீதிக்கான குறியாக உள்ளது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில், சிந்தூர் எனவும் பெயரிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவம் 2025 மே 7ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன.. அதனின் நோக்கம் என்ன என்பது குறித்து இந்தியா ராணுவம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்க உள்ளது. பாகிஸ்தான் பதிலடி தாக்குதலை அடுத்து, இந்தியா ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது.. ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டு இருந்தது.