Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமலுக்கு வந்த வக்பு வாரிய திருத்த சட்டம்.. மேற்கு வங்கத்தில் கலவரமாக மாறிய போராட்டம்!

Protest Against Waqf Amendment Bill | நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இன்று (ஏப்ரல் 08, 2025) முதல் வக்பு வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கலவரம் வெடித்துள்ளது.

அமலுக்கு வந்த வக்பு வாரிய திருத்த சட்டம்.. மேற்கு வங்கத்தில் கலவரமாக மாறிய போராட்டம்!
மேற்கு வங்கம் போராட்டம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Apr 2025 21:54 PM IST

மேற்கு வங்கம், ஏப்ரல் 08 : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஏப்ரல் 2, 2025 அன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை (Waqf Amendment Bill) தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிராக இரு அவைகளிலும் நீண்ட நேர காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் நள்ளிரவில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. வக்பு வாரிய சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று (ஏப்ரல் 08, 2025) நாடு முழுவதும் வக்பு வாரிய புதிய சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

பல மணி நேர விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கலான மசோதா

மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அமலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதே அதற்கு கடும் எதிர்ப்புகள் எழ தொடங்கின. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது குறித்து பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தன. என்னதான் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும், மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டுவர உறுதியாக இருந்தது. அதன்படி, ஏப்ரல் 2, 2025 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.

அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மசோதா மீது மிக நீண்ட நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையின் அடிப்படையில் முதலில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையில் நடத்தப்பட்ட வாங்கெடுப்பிலும் பெரும்பான்மையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்தது. அடுத்தக்கட்டமாக குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

போராட்டம் குறித்து பதிவிட்ட பாஜக

வக்பு வாரிய திருத்த சட்டத்தால் மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்

வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் அதற்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் அந்த அபகுதியின் முக்கிய சாலைகளில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில், போராட்டககாரர்கள் மற்றும் காவல்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.