வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!

Uttar Pradesh Dowry Death | சமீப காலமாக இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கை மற்றும் கால்களில் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Jul 2025 09:30 AM

லக்னோ, ஜூலை 19 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) வரதட்சணை கொடுமையால் மனமுடைந்த இளம் பெண் கைகளில் காரணத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அந்த பெண், மன உலைச்சல் காரணமாக இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை

உத்திரபிரதேச மாநிலம், பாக்பாத் பகுதியை சேர்ந்தவர் மணிஷா. இவருக்கு 28 வயது ஆகும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நொய்டா பகுதியை சேர்ந்த குந்தன் என்பவர் உடன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்காக மணிஷாவின் பெற்றோர் ரூபாய் 20 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மாப்பிள்ளைக்கு இரு சக்கர வாகனம் ஒன்றையும் அவர்கள் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து வரதட்சணையாக மேலும் பணம் வேண்டும் என்றும் புதிய கார் வேண்டும் என்றும் கணவன் குந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணிஷாவை தொந்தரவு செய்து தொடங்கி உள்ளனர். அதுமட்டுமன்றி வரதட்சணை கேட்டு குந்தனின் குடும்பத்தினர் மணிஷா மீது மின்சாரம் பாய்ச்சி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்

இந்த கொடுமைகளை தாங்காமல் 2024 ஆம் ஆண்டு மணிஷா தனது பெற்றோருடன் வந்து வாசிக்க தொடங்கியுள்ளார். மகளின் துயரத்தை கண்ட பெற்றோர், விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணையாக கொடுத்த பொருட்களை வாங்கும் வரை விவாகரத்துக்கு சம்மதிக்க மாட்டேன் என மணிஷா பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 15, 2015 அன்று மணிஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான காரணத்தை அவர் தனது கை கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு தனது கணவன் குந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.