AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் உறவு சிறப்பு வாய்ந்தது – இந்திய தூதர் சஞ்சய் சுதிர்

News9 Global Summit 2025: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலத்தின் சோதனையாகத் தாக்குப்பிடித்தது மட்டுமல்லாமல், ஆழமான வேரூன்றிய நம்பிக்கை மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய தாக்கத்துடன் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையாகவும் உருவாகியுள்ளது எனவும் இந்திய தூதர் சஞ்சய் சுதில் கூறினார். 

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் உறவு சிறப்பு வாய்ந்தது – இந்திய தூதர் சஞ்சய் சுதிர்
இந்திய தூதர் சஞ்சய் சுதிர்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Jun 2025 14:58 PM IST

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் உறவை மிகவும் சிறப்பு வாய்ந்தது  என்று  ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான (UAE) இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த நியூஸ்9 குளோபல் உச்சி மாநாட்டில் பேசிய சுதிர், இருதரப்பு உறவுகளின் ஆழத்தை எடுத்துரைத்தார். அப்போது 2017 ஆம் ஆண்டில் இந்தியா விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட்ட முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என சுதிர் நினைவுக் கூர்ந்தார். மேலும் வளைகுடா நாடான துபாயை இந்தியாவின் பிராந்தியத்தில் மிக நெருக்கமான நட்பு நாடு என்று அழைத்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலத்தின் சோதனையாகத் தாக்குப்பிடித்தது மட்டுமல்லாமல், ஆழமான வேரூன்றிய நம்பிக்கை மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய தாக்கத்துடன் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையாகவும் உருவாகியுள்ளது என கூறினார்.

முத்து மற்றும் மசாலாப் பொருட்களின் வர்த்தகம் வரை கூட்டாண்மையின் வரலாற்று வேர்களைச் சுட்டிக்காட்டிய இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர், இந்த உறவு, முன்னோடியில்லாத ஆழம் மற்றும் முதிர்ச்சியின் அளவை எட்டியுள்ளது என கூறினார். அப்போது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக சமீபத்தில் கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார்.

இந்த உறவுகள் இப்போது வெறும் வர்த்தகம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்கள் வீடாக மாற்றுகிறார்கள், புதிய பகுதிகள் உண்மையில் உறவை மறுவரையறை செய்கின்றன, வர்த்தகம் செழித்து வளர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி

கடந்த நிதியாண்டில் (2024–25), வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற எதிர்பாராத அடையாளத்தைத் தாண்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு 19 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டணி நாடாகவும்,  இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எழுச்சியையும் சஞ்சய் சுதிர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நியூஸ்9 இந்தியாவின் துடிப்பான ஊடகங்களின் முகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரசியல், பொருளாதாரம் அல்லது சமூக ரீதியாக நாட்டின் துடிப்பை பிரதிபலிக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். ஜெர்மனியில் இதேபோன்ற ஒரு நிகழ்வின் வெற்றிக்குப் பிறகு, துபாயில் உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமான தேர்வாகும் எனவும் சஞ்சய் சுதிர் பாராட்டு தெரிவித்தார்.

நியூஸ்9 உலகளாவிய உச்சி மாநாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நியூஸ்9 குளோபல் உச்சி மாநாடு 2025, இந்தியாவிற்கும் UAE க்கும் இடையிலான வளர்ந்து வரும் பிணைப்பை மையமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளிலிருந்தும் பல முக்கிய நபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். ‘இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான கூட்டாண்மை’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில் இரு நாடுகளின் அரசியலமைப்பு தலைவர்கள், வணிக நிறுவனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னேற்றம், புதுமை மற்றும் வலுவான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். நியூஸ்9 குளோபல் உச்சி மாநாடு என்பது இந்தியாவையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளவும், எதிர்கால முதலீடுகளை உருவாக்கவும் ஒரு இடமாகும்.

Follow Us