ரீல்ஸ் மோகத்தால் பலியான 2 இளைஞர்கள்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
Two Young Man Swept Away In River | உத்தர பிரதேசத்தில் உள்ள ரப்தி ஆற்றில் சில இளைஞர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களில் ஒரு இளைஞர் ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்த நிலையில், இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
லக்னோ, ஜூன் 06 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) இரண்டு இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் நீச்சல் அடித்தபடி அவர்கள் ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்த நிலையில், இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆற்றில் மூழ்கி பலியான இரண்டு இளைஞர்கள்
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே உள்ள கர்தாஹரி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர், அங்குள்ள ரப்தி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தபோது, நீச்சல் அடித்தபடியே தங்களது மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகம்: 2025-26ல் 7.7% ஜிடிபி வளர்ச்சி
ரீல்ஸ் மோகத்தால் உயிரை இழந்த இளைஞர்கள்
ரீல்ஸ் எடுத்தபடியே நீச்சல் அடித்த நிலையில், ஒரு இளைஞர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதனை கண்ட மற்றொரு இளைஞர் அவருக்கு உதவி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இரண்டு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக இளைஞர்கள் பொதுமக்களின் உதவியுடன் இணைந்து தங்களது நண்பர்களை காப்பாற்ற முடிவு செய்த நிலையில், அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதையும் படிங்க : நேருவின் சாதனையை முறியடிக்கத் தயாராகும் பிரதமர் மோடி… பொருளாதார அடித்தளம் முதல் டிஜிட்டல் யுகம் வரை… இந்தியாவின் நிர்வாகப் பயணம்!
இந்த நிலையில், இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில், அந்த இரண்டு இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டு கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சக இளைஞர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.