22 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கிய வழக்கு.. நர்ஸ் கொலையில் மர வியாபாரி கைது.. பகீர் பின்னணி!

Nurse Murder Case Revealed | கேரளாவில் இளம் நர்ஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யார் என தெரியாமல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

22 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கிய வழக்கு.. நர்ஸ் கொலையில் மர வியாபாரி கைது.. பகீர் பின்னணி!

குற்றவாளி நசீர்

Updated On: 

02 Feb 2026 18:19 PM

 IST

பத்தினம்திட்டா, பிப்ரவரி 02 : கேரள (Kerala) மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், கோட்டாங்கல் பகுதியை சேந்தவர் டிஞ்சு. 25 வயதான இவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். டிஞ்சு தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார். இந்த நிலையில், தனது 36 வயது ஆண் நண்பர் டிஜின் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 2019, ஆகஸ்ட் 15 ஆம் தேதி டிஞ்சு தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த மர்மம் தற்போது விலகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிஞ்சுவின் வழக்கில் நீடித்து வந்த மர்மம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் டிஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக டிஞ்சுவின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியபோதும், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், உடற்கூராய்வு முடிவில் டிஞ்சு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் டிஞ்சுவின் கை நகத்தில் மனித தோல் இருந்துள்ளது. அது டிஜின் உடையது இல்லை என தெரிய வந்த நிலையில் அவர் நிரபராதி என கூறி விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கிய காவலர்.. குழந்தையை போல கதறி அழுத வீடியோ வைரல்!

22 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கிய வழக்கு

இந்த வழக்கில் குற்றவாளி யார் என தெரியாமல் போலீசார் குழம்பி வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 22 மாதங்கள் கழித்து நசீர் என்ற 46 வயது மர வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை தொடர்ந்து இந்த கொலை குற்றத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. அதாவது சம்பவத்தன்று நசீர் டிஞ்சுவின் வீட்டிற்கு மரம் வெட்ட சென்றுள்ளார். அங்கு டிஞ்சு மற்றும் தனியாக இருப்பதை உணர்ந்த அவர், அவரை அனுபவிக்க முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டருக்கு ரூ.18,000 கட்டணம் வசூலித்த டாக்ஸி டிரைவர்.. கைது செய்த மும்பை போலீஸ்!

அதன்படி, டிஞ்சுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் அவரை தாக்கியுள்ளார். இதில் டிஞ்சு மயக்கமடைந்த நிலையில், நசீர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு மயக்க நிலையில்,  இருந்த டிஞ்சுவை துணையை கொண்டு தூக்கில் தொங்க விட்டுள்ளார். இந்த பகீர் பின்னணி வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நசீருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!