திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தருக்கு திடீர் மாரடைப்பு.. சோகத்தில் முடிந்த ஆன்மிக பயணம்!

Devotee Dies of Heart Attack | திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் புகழ்பெற்றது என்பதால் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அந்த வகையில், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தருக்கு திடீர் மாரடைப்பு.. சோகத்தில் முடிந்த ஆன்மிக பயணம்!

உயிரிழந்த நபர்

Published: 

20 Jul 2025 11:14 AM

திருப்பதி, ஜூலை 20 : திருப்பதிக்கு (Tirupati) சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஜூலை 20, 2025) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பதிக்கு சென்ற பக்தருக்கு திடீர் மாரடைப்பு – சோகத்தில் முடிந்த ஆன்மிக பயணம்

கர்நாடகா மாநிலம், மாலூரை சேர்ந்தவர் வேணுகோபால். 45 வயதாகும் இவர் ஜூலை 17, 2025 அன்று திருப்பதி கோயில்லு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் சுவாமியை தரிசனம் செய்ய வரிசையில் நின்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் உடனடியாக இது குறித்து கோயில் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ஊழியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் வேணுகோபாலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க : மின்னல் தாக்கில் 34 பேர் பலி.. ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை.. பீகாரில் சோகம்!

சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த திருப்பதி பக்தர்

அங்கு வேணுகோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததை உறுதி செய்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அங்கிருந்து அவர் சிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஜூலை 19, 2025) பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!

உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை

வேணுகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை கண்டுபிடித்த போலீசார், உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.