அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

Delhi-Mumbai Expressway crash: மஹிந்திரா XUV700 கார் அதிவேகமாக சென்ற சமயத்தில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதோடு, விரைவுச் சாலைகளின் தடுப்பு கம்பிகள் தரம், அந்த சாலைகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

கார் விபத்து

Updated On: 

15 Nov 2025 14:40 PM

 IST

மத்திய பிரதேசம், நவம்பர் 15: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே டெல்லிமும்பை நெடுஞ்சாலையில் நடந்த கொடூரமாக சாலை விபத்தில், அதிக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 15 வயது சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தில் இருந்து மத்திய பிரதேசம் வழியாக டெல்லி நோக்கி அந்த கார் பயணித்த சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, விபத்து  குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்கூட்டரில் சென்ற குடும்பத்தை கார் மோதி கொலை செய்ய முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

மும்பை, அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் பலி:

தொடர்ந்து போலீசாரின் விசாணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் அகமதாபாத் மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, குலாம் ரசூல் சவுத்ரி (70),  அவரது மகன் காலிஸ், அப்துல் குலாம், டேனிஷ் (15), மற்றும் துர்கேஷ் பிரசாத் (35) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான
வாகனத்திலிருந்து உடல்களை மீட்டெடுப்பதில் உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு உதவியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களது உடல்கள் ரத்லமில் உள்ள டாக்டர் லட்சுமி நாராயண் பாண்டே அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வந்தவுடன் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதிவேகமாக சென்ற கார்:

போலீசாரின் முதற்கட்ட அறிக்கைகளின்படி, இந்தூர் அருகே நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற அந்த கார், மஹி நதிப் பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, உலோகத் தடையை உடைத்து அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தது. வாகனத்தின் அதிவேகமே இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.

அதோடு, நீண்ட தூர பயணங்களில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் “microsleep” காரணமாகவும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். பெரும்பாலான விபத்துகள் ஒன்று அதிவேகம் காரணமாகவும், மற்றொன்று ஓய்வில்லாமல் ஒரே ஓட்டுநர் நீண்ட தூரத்திற்கு வாகனத்தை ஓட்டும் போது, உடலில் ஏற்படும் சோர்வு காரணமாகவும், லேசாக கண் அசர்வதாலும் தான் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மருத்துவமனை வாசலில் நர்ஸ் படுகொலை.. கணவன் வெறிச்செயல்!

அடுக்கடுக்காக எழும் கேள்வி?:

இந்த விபத்துக்கு பிறகு, டெல்லிமும்பை விரைவுச் சாலையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விரைவு சாலையில் அதிவேகம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? சாலை தடுப்பு அமைப்புகள் போதுமானவையா? வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை பலகைகள், இடைவெளிப் புள்ளிகள் போதுமான அளவு வழங்கப்பட்டுள்ளனவா? தடுப்புகள் போதுமான வலிமை கொண்டதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வைரலாகும் வீடியோ:

விபத்துக்குள்ளான அந்த கார், XUV700 ரக கார் என்றும், மகாராஷ்டிரா பதிவு எண் (MH03 EL 1388) கொண்ட கார் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கார் பள்ளத்தில் விழுந்ததால், அதில் சிக்கயவர்களை மீட்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், நீண்ட தூர பயணங்களில் சரியான இடைவெளியில் முறையாக ஓய்வு எடுத்து கொள்ளுதல் அவசியம் என்றும், மிதமான வேத்தில் செல்ல வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.