Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு.. உத்தரகாண்டில் அதிர்ச்சி!

Uttarakhand Helicopter Crash : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் பயணித்த இரண்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாசி மாவட்டம் கங்கநானி பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை அடுத்து, 5 பேர் உயிரிழந்தனர். 

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு.. உத்தரகாண்டில் அதிர்ச்சி!
ஹெலிகாப்டர் விபத்துImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2025 11:58 AM

உத்தரகாண்ட், மே 08 : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் (Uttarakhand Helicopter Crash) 5 பயணிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் பயணித்த இரண்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாசி மாவட்டம் கங்கநானி பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை அடுத்து, 5 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானி உட்பட 7 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் டேராடூனில் இருந்து ஹர்சில் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது.

ஹெலிகாப்டர் விபத்து

அப்போது, கங்கான மலைப்பகுதிக்கு செல்லும்போது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும், அதில் பயணித்த 7 பேருக்கு பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து அறிந்ததும், உள்ளூர் போலீசார் விரைந்து வந்தனர். மேலும், மீட்பு குழுக்களும் விரைந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மருத்துவக் குழுவும் விரைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   உயிரிந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்துக்கான காணரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தனியார் விமானம் என்று  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 5 பேர் பலி

மாநில பேரிடர் நிவாரணப் படை  மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உத்தரகாசி மாவட்ட நீதிபதியும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ”விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இழப்பைத் தாங்கும் வலிமையை இழந்த குடும்பங்களுக்கு கடவுள் வழங்கட்டும். காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், விபத்து குறித்து விசாரிக்கவும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்த விபத்தில்  படுகாயம் அடைந்த இரண்டு பேர்  மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தெரிகிறது.

 

தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் ..
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் .....
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!...
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?...
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?...
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?...