முடிவுக்கு வருமா பிரச்னை? ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?

India Pakistan Conflict : வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்க நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். முன்னதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடனும் அவர் பேசி இருக்கிறார்.

முடிவுக்கு வருமா பிரச்னை? ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Updated On: 

10 May 2025 12:32 PM

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசியுள்ளார். இந்திய பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இவரது பேச்சுவார்த்தை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்போது, இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணித்து நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். எதிர்கால மோதலை தடுக்க அமெரிக்கா உதவும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மூன்றாவது நாட்களாக இருநாடுகளும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

குறிப்பாக, பாகிஸ்தான் பொதுமக்கள் இருக்கும்  இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  2025 மே 10ஆம் தேதியான இன்று கூட,  பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அதனை இந்தியா முறியடித்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் சூழல் நிலவுகிறது.

இதனை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. உலக நாடுகள் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர். இதில், அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில்,  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், இருநாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார். பதட்டத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கும்படியும் கூறியுள்ளார்.

ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடனும் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது, இந்தியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமைதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க செய்யும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். ஜெய்சங்கருடன் ரூபியோ பேசுவது இது இரண்டாவது முறை. முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஜெய்சங்கருடன் மார்கே ரூபியோ பேசியிருந்தார்.  எனவே, உலக நாடுகள் அனைத்தும்  மோதல் தணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.