ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்.. 5 மாநிலங்களில் இலவச பேருந்து சேவை.. லிஸ்ட் இதோ!

Raksha Bandhan 2025 : ரக்ஷா பந்தன் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்.. 5 மாநிலங்களில் இலவச பேருந்து சேவை..  லிஸ்ட் இதோ!

ரக்ஷா பந்தன்

Updated On: 

08 Aug 2025 07:55 AM

டெல்லி, ஆகஸ்ட் 08 : ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஐந்து மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இலவச பேருந்து சேவையை அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் ரஷ்கா பந்தன் கொண்டாடப்படவில்லை என்றாலும், வட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கட்டுகிறார்.

இதன் மூலம், தங்கள் வாழ்நாள் முழுவதும் சகோதரர்க்ள உடன் இருக்கவும், ஆதரிக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். மேலும், சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தியும் ராக்கி கட்டுகிறார். பின்னர், சகோதரர்களுக்கு பரிசுகளையும் வழங்குகிறார்கள். இந்த கொண்டாட்டம் வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில், ரஷ்கா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, வடமாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… தோட்டத்தில் கிடந்த சடலங்கள்.. கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்!

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை

உத்தர பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பெண்களுக்கு மூன்று நாட்கள் இலவச பேருந்து சேவையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த மூன்று நாட்களுக்கு நகர்ப்புற பேருந்து சேவையிலும், கிராமப்புற பேருந்து பகுதிகளில் இந்த வசதி கிடைக்கும என தெரிவித்தார். 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி நள்ளிரவு வரை இலவச பேருந்து சேவை இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஹரியானா மாநிலத்தில் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு வரை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவையை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சண்டிகருக்கு இயக்கப்படும் பேருந்துகள் உட்பட, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில், 2025 ஆகஸ்ட் 9, 10ஆம் தேதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகளில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்முறையாக ரக்ஷா பந்தனை முன்னிட்டு, பெண்களுக்கு இரண்டு நாட்கள் இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்ல முயன்ற கும்பல்.. மும்பையில் பகீர் சம்பவம்!

போபால் மற்றும் இந்தூரில் உள்ள பெண்கள் 2025 ஆகஸ்ட் 9 ஆம் தேதி நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். மேலும், லாட்லி பெஹ்னா யோஜனாவின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1500 மற்றும் ரூ.250 மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.