புலிகள் நிறைந்த நடுக்காட்டுப் பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் – திகில் சம்பவம்!
Rajasthan Tiger Safari Horror: ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவில் புலிகளை காண ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள், வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 90 நிமிடங்கள் நடுக்காட்டில் சிக்கித் தவித்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. புலிகள் நிறைந்த காட்டின் நடுவே பெண்கள், குழந்தைகள் உட்பட சுற்றுலா பயணிகள் சுமார் 90 நிமிடங்கள் சிக்கிக் கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 16, 2025 அன்று சுற்றுலா பயணிகள் புலிகளை காணும் ஆர்வத்துடன், பூங்காவின் வழிகாட்டியின் உதவியுடன் காட்டுக்குள் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் சரியாக 6 மணி அளவில் அவர்கள் பயணம் செய்த கேண்டர் வாகனம் பழுதடைந்திருக்கிறது. இந்த நிலையில் உடனடியாக வேறு வாகனத்தை கொண்டு வருவதாக சென்ற வழிகாட்டி 90 நிமிடங்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தானில் உள்ள ரந்தம் போர் தேசிய பூங்கா புலிகளுக்காக பிரசிதித்தி பெற்றது. புலிகள் நிறைந்த காட்டுப்குதி என்பதால் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அவர்களை பூங்காவின் வழிகாட்டி கேண்டர் வாகனம் மூலம் காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்வார். வாகனம் நிற்காமல் மெதுவாக சென்று கொண்டே இருக்கும். இடையில் தென்படும் புலிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பர். சிலர் தங்கள் செல்போன் கேமராவில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பர்.
இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!
சம்பவம் நடந்தது எப்படி?
அப்படி சென்ற ஒரு சுற்றுலாப் பயணிகள் தான் மாலை 6 மணி அளவில் நடுக்காட்டில் சிக்கி தவித்திருக்கின்றனர். வேறு வாகனத்தை ஏற்பாடு செய்வதாக கூறி சென்ற வழிகாட்டி 90 நிமிடங்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பயணிகள் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். வைரலாகும் வீடியோக்களில் காட்டில் இருள் சூழந்த பகுதியில் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட வண்ணம் இருக்கின்றன. பின்னர் ஒரு வழியாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை மீட்டனர்.
இதையும் படிக்க : இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு
வனத்துறை அதிகாரியின் விளக்கம்
ரந்தம்போர் புலிகள் காப்பகத்தின் தலைவர் மற்றும் முதன்மை வனக்காப்பாளர் அனுப் கே.ஆர் தெரிவித்ததாவது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பே எங்கள் முதல் முன்னுரிமை. விதிகளை மீறுகிற வழிகாட்டி அல்லது டிரைவர்கள் மீது உறுதியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிப்பட்ட அலட்சியம் இனி எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ளப்படாது என தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகளுடன் புலிகள் நிறைந்த நடுக்காட்டில் சிக்கிக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.