டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!!
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவையொட்டி தமிழ்நாட்டின் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

மோடியின் பொங்கல் கொண்டாட்டம்
டெல்லி, ஜனவரி 14: டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில், ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடந்தது.
இதையும் படிக்க: பழைய பொருட்களை எரித்து, மேளம் கொட்டி உற்சாகம்.. களைகட்டிய போகி கொண்டாட்டம்!!
பொங்கல் வைத்து கொண்டாடிய மோடி:
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi attends Pongal celebrations at the residence of Union Minister L Murugan.
(Source: DD News) pic.twitter.com/HGOKKuSNty
— ANI (@ANI) January 14, 2026
இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவரது முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, தமிழ்நாட்டின் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்காக எல்.முருகனின் வீடு கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடனும், ரவி தனது தோழி கெனிஷாவுடனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!
தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி:
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தமிழ் கலாச்சாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றபடுகின்றனர் என்று கூறிய அவர், தங்களோடு பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார். தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்புடன் திருக்குறள் இருந்துள்ளது. வேளாண்மையை நிலைத்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதே மத்திய அரசின் திட்டம் என்றார். வேளாண் குடிமக்களின் கரங்களை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.