PM Modi on India Pakistan Relation: தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக பாய முடியாது.. பாகிஸ்தான் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு!
PM Modi's Strong Warning to Pakistan: பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும், பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் உறுதியாகக் கூறினார்.

டெல்லி, மே 12: பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) பஹல்காம் தாக்குதல் (Pahalgam Terror Attack), ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து இன்று அதாவது 2025 மே 12ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, அண்டை நாடான பாகிஸ்தானை கடுமையாக தாக்கி பேசியதுடன், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்றும், தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக பாய முடியாது என்றும் கூறினார். மேலும், பாகிஸ்தானை பழிவாங்கும் நடவடிக்கையை இப்போதையும் ஒத்தி வைத்துள்ளோம். பாகிஸ்தான் என்ன அணுகுமுறையை எடுக்கிறது என்பதை பொறுத்து வரும் நாட்களில் இந்திய இராணுவம் செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் கண்ணீர் வடித்தது:
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் மிகுந்த விரக்தி அடைந்தது. இந்தியா நினைத்து பார்க்காத அளவுக்கு பாகிஸ்தானை அழித்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிகளை தேட தொடங்கி, உலக நாடுகளிடம் கண்ணீர் வடித்தது. கடந்த 2025 மே 10ம் தேதி மதியம் பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தை தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கோரியது. அதற்குள் நமது ராணுவம் பயங்கரவாதத்தை பெரிய அளவில் அளித்துவிட்டது.” என்றார்.
பழிவாங்கும் நடவடிக்கை முடியவில்லை:
🇮🇳INDIAN PM MODI SAYS ~
” NO NUCLEAR BLACKMAIL WILL BE TOLERATED ANYMORE…”#Modiji #PMModi #OperationSindoor pic.twitter.com/x0X3cWFVve
— Crypto_Bharat🇮🇳 (@Crypto_Bharat7) May 12, 2025
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கையை இப்போதைக்கு ஒத்துவைத்துள்ளோம். பாகிஸ்தான் என்ன அணுகுமுறையை எடுக்கிறது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம். மூன்று இந்தியப் படைகளும், எல்லைப் பாதுகாப்புப் படையும் உஷார் நிலையில் உள்ளன. சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையாக ஆபரேஷன் உள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிப்படும் ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்தியா எந்த அணு ஆயுத மிரட்டலையும் பொறுத்துக்கொள்ளாது. இந்தியா துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தாக்கும்” என்றார்.
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக பாய முடியாது:
போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை நாம் தோற்கடித்துள்ளோம். இந்திய இராணுவம் தங்களது திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தியது. இந்த தாக்குதலின்போது நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அற்புதமாக செயல்பட்டது. இதனை உலகமும் கண்டது. நாம் அனைவரும் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக ஒற்றுமையாக இருக்க வேண்டும், இதுவே நமது மிகப்பெரிய பலம்.
பாகிஸ்தான் அரசாங்கமும், ராணுவமும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றன. அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும். பாகிஸ்தான் உபாகிஸ்தான் உயிர்வாழ விரும்பினால், அது பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். இதைத் தவிர அமைதிக்கு வேறு வழியில்லை. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது. அதேபோல், தண்ணீரும் இரத்தமும் கூட ஒன்றாகப் பாய முடியாது.” என்று தெரிவித்தார்.