ஆர்ட் ஆஃப் லிவிங் 45வது ஆண்டு விழா: குருதேவ் பிறந்தநாளில் மோடி பங்கேற்பு, புதிய சேவை திட்டங்கள் தொடக்கம்

மே 13ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூருவில் கனகபுரா சாலையில் உள்ள ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ சர்வதேச மையத்திற்கு வருகை தர உள்ளார். குருதேவுடன் பிரதமருக்கு உள்ள நெருங்கிய உறவு அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்பும் உலக கலாச்சார விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டு, இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல  ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

ஆர்ட் ஆஃப் லிவிங் 45வது ஆண்டு விழா: குருதேவ் பிறந்தநாளில் மோடி பங்கேற்பு, புதிய சேவை திட்டங்கள் தொடக்கம்

கோப்பு புகைப்படம்

Published: 

05 May 2026 21:01 PM

 IST

மே 5, 2026: நாம் எப்போதாவது மன அமைதிக்காகவோ அல்லது சமூக சேவைகள் குறித்து சிந்திக்கும் போது, முதலில் நினைவிற்கு வரும் பெயர்களில் ‘Art of Living Foundation’ ஒன்றாகும். உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளி ஊட்டிய இந்த நிறுவனம் தற்போது ஒரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2026 மே மாதத்தில் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ தனது 45வது ஆண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்க, அதன் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரை வாழ்த்திய பிரதமர் மோடி:

இந்த விழாக்களை முன்னிட்டு, மே 13ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூருவில் கனகபுரா சாலையில் உள்ள ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ சர்வதேச மையத்திற்கு வருகை தர உள்ளார். குருதேவுடன் பிரதமருக்கு உள்ள நெருங்கிய உறவு அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்பும் உலக கலாச்சார விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டு, இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல  ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

இந்த பயணம் வெறும் வாழ்த்துகளுக்காக மட்டுமல்லாமல், சமூக நலனுக்காக வடிவமைக்கப்பட்ட பல சேவைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே, நிறுவனம் “Unsung Everyday Heroes” போன்ற திட்டங்களின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் அமைதியாக சேவை செய்து வரும் நபர்களை அடையாளம் கண்டு கௌரவித்து வருகிறது. இந்த விழாக்களின் ஒரு பகுதியாக மேலும் பல புதிய திட்டங்களுக்கும் மோடி துவக்கமிட உள்ளார்.

இந்த 45 ஆண்டுகால பயணத்தில், ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ யோகா மற்றும் தியானம் மட்டும் அல்லாமல், நதிகள் மறுசீரமைப்பு, கல்வி வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை போன்ற பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த நிறுவனம், மனித மதிப்புகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த பயணத்தின் மூலம் இந்திய ஆன்மீகம் மற்றும் சேவை மனப்பான்மை மீண்டும் உலக அரங்கில் ஒளிர உள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..