India Pakistan Conflict : ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
Pak Provocation Continues : பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, ஜம்மு, சம்பா, பாதான்கோட், பெரோஸ்பூர், ஜெய்சல்மேர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் (Pakistan) மீண்டும் மே 9, 2025 அன்று, இந்திய எல்லையில் ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு, சம்பா, பாதான்கோட், பெரோஸ்பூர், ஜெய்சல்மேர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்ரன், பார்மர் பகுதிகளில் வெடித்த சத்தங்களும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பாரமுல்லாவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை மேலும் ஐந்து நாட்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. புதிய தகவலின் படி, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், இமாச்சலப் பிரதேசத்தில் பூந்தர், சிம்லா, காங்க்ரா-கக்கல், சண்டிகர், ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் லே, ராஜஸ்தானில் கிஷன்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர்; குஜராத்தில் முந்த்ரா, ஜாம்நகர், ஹிராசர், போர்பந்தர், கேஷோத், காண்ட்லா மற்றும் புஜ் ஆகிய விமான நிலையங்கள் மே 14 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
மேற்சொன்ன விமான நிலையங்கள் மீண்டும் மே 15 ஆம் தேதி காலை 5.29 மணிக்கு திறக்கப்படும். பாகிஸ்தானுடனான மோதலைத் தொடர்ந்து நாட்டில் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டன. அதுவரை இந்த விமான நிலையங்களுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன. டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் டிரோன்
Pakistani drones sighted in Jammu, Samba, Pathankot sector: Sources
Read @ANI Story | https://t.co/mF4XpU82Ia#India #Pakistan #drones #Jammu #Pathankot pic.twitter.com/lAnIbsvnOB
— ANI Digital (@ani_digital) May 9, 2025
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் முழுமையான மின்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் அக்னூர் பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் அவசரகால சைரன்கள் ஒலித்தன. ஜம்மு, பதான்கோட் மற்றும் சம்பா போன்ற இடங்களில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனையடுத்து இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலை நீட்டித்து வருகிறது.