துபாயின் புகழ்பெற்ற கட்டிடமான புர்ஜ் கலீபாவின் உச்சியில் மின்னல் தாக்கும் அதிர்ச்சி தருணத்தை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். கனமழையுடன் கூடிய புயல் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இருண்ட மேகங்கள், மழை சத்தம் மற்றும் இடியோசை ஆகியவற்றுடன் மிகச் சிறப்பாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, புர்ஜ் கலீபாவை பின்னணியாகக் கொண்டு நிகழ்ந்த இந்த அபூர்வமான இயற்கை நிகழ்வை பார்த்தவர்கள் ஆச்சரியத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தினர்.