2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள முக்கிய ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான ஆர்ஆர்பி தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வரவிருக்கும் தேர்வுக்கான கால அட்டவணையை முன்கூட்டியே அறிய வாய்ப்பளிப்பதால், லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களின் தேர்வுக்கான தயாரிப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்த உதவியாக இருக்கும். இந்த தேர்வு காலண்டர் அறிவிப்புடன், அனைத்து மண்டல ரயில்வேகளும் மற்றும் உற்பத்தி யூனிட்களும் தங்களின் காலிப் பணியிடங்களை மதிப்பீடு செய்து, OIRMS என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.