நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது… காண்பது எப்படி? முழு விவரம்!

NEET UG Exam Result : நீட் இளநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வை முகமை வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு மே 4ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், தற்போது அத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.

நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது... காண்பது எப்படி? முழு விவரம்!

நீட் இளநிலை தேர்வு முடிவுகள்

Updated On: 

14 Jun 2025 14:32 PM

டெல்லி, ஜூன் 14 :  நீட் இளநிலை தேர்வு (Neet UG Exam Result) முடிவுகளை தேசிய தேர்வை முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு மே 4ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், 2025 ஜூன் 14ஆம் தேதியான இன்று நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் சித்தா, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நாட்டில் மொத்தம் 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இவை நிரப்பப்பட்டு வருகறிது. தமிழகத்தில் 12,050 மருத்துவ இடங்கள் உள்ளன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதின.

இந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 548 நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 720 மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் இயற்பியல் 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 45 மதிப்பெண்கள், உயிரியல் பாடத்தில் 90 கேள்விகள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.  இந்த தேர்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் நீட் தேர்வில் முதலிடத்தையும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது 

நீட் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

  • முதலில் மாணவர்கள் என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள NEET UG 2025 Result என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு, விண்ணப்ப எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பார்ஸ்வோர்டு, கேப்ட்சா ஆகியவை உள்ளீட வேண்டும்.
  • அதன்பிறகு உங்கள் நீட் இளநிலை தேர்வு முடிவுகள் காட்டப்படும்.
  • அதன்பிறகு, உங்கள் மதிப்பெண் அட்டையை Download என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்