இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? மத்திய அமைச்சர் விளக்கம்

Lockdown Rumours Denied: இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் லாக்டவுன் குறித்த எந்த திட்டமும் பரிசீலனை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? மத்திய அமைச்சர் விளக்கம்

Union Minister Hardeep Singh Puri

Updated On: 

27 Mar 2026 15:00 PM

 IST

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்படாது.  அதுபற்றி எந்த திட்டமும் பரிசீலனை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.  சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து அமைச்சர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் லாக்டவுன் குறித்து பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இத்தகைய சூழலில் மக்கள் அமைதியாகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வதந்திகளை பரப்புவது ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.

உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு அந்த நிலையமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எரிசக்தி விநியோகம் தடையில்லாமல் நடக்கவும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

இதையும் படிக்க : நீடிக்கும் போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடவடிக்கை

இதுகுறித்து மேலும் பேசிய அவர் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் எதிரொலிக்காத வகையில் அரசு பார்த்துக்கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஒரு பேரல் எண்ணெய் விலை 70 டாலர் முதல் 122 டாலர் வரை உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் அதன் தாக்கத்தை குறைக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா 2 விதமான பிரச்னைகளை எதிர்கொண்டது.

அதில் பொதுமக்களுக்கு விலையை உயர்த்துவது அல்லது அரசே அதன் நிதி சுமையை ஏற்பது என்ற சிக்கல்களை எதிர்கொண்டது. இதில் பொதுமக்களை பாதுகாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதிக்கு அரசு கூடுதல் வரி விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு வைக்க முடியும்.  இந்தியாவில் எரிபொருள் விநியோகம்  தடையில்லாமல் தொடரும் என்றார்.

இதையும் படிக்க : இந்தியா முழுவதும் எரிவாயு பைப்லைன் விரிவாக்கம்.. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த உத்தரவு..

கலால் வரியை குறைத்த மத்திய அரசு

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்து உத்தரவிட்டார். பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்தும் டீசலுக்கு முழுமையாக ரத்து செய்தும் அறிவிப்பு வெளியிட்டார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை குறைத்துள்ளது.

அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோலூக்கு முன்ப ரூ.13ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல டீசலுக்கு ரூ.10 என கலால் வரி வசூலிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..