மாணவர்களே அலர்ட்… நீட் தேர்வு குறித்து போலி தகவல்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு

NEET Exams : நீட் தேர்வுகள் தொடர்பாக போலியான தகவல்கள், விளம்பரங்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதோடு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தர உதவி செய்தாக கூறி, பல மோசடிகளும் நடந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களே அலர்ட்... நீட்  தேர்வு குறித்து போலி தகவல்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வுகள்

Updated On: 

11 Jul 2025 11:50 AM

டெல்லி, ஜூலை 10 : நீட் தேர்வுகள் (NEET Exams) தொடர்பாக போலியான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் ((National Board Of Examinations In Medical Sciences) அறிவுறுத்தி உள்ளது.  நீட்  முதுநிலை தேர்வுகள் குறித்து போலியான தகவல்கள் வெளியாகி வருவதாக  புகார் எழுந்த நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், சித்தா, பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் இளநிலை தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்புகள் முடித்தவர்கள் முதுநிலை தேர்வுகளுக்கு தகுதியானவர்கள். எம்.டி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு இத்தேர்வு நடக்கிறது.

இந்த இரண்டு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த தேர்வுகக்காக மாணவர்கள் தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அண்மையில் தான், நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இதற்கிடையில், நீட்  முதுநிலை தேர்வுகள் குறித்து போலியான தகவல்கள் வெளியாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்த போலியான அறிவிப்புகள் மூலம் மாணவர்கள் மோசடிகளில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.

Also Read : ஜூலையில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…? முழு விவரம் இதோ!

மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அதன்படி, நீட் தேர்வுகள் தொடர்பகா போலியான மின்னஞ்சல்கள், செய்திகள், அதிகாரப்பூர்வமாக வந்ததாக கூறப்படும் போலியான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், மாணவர்கள் natboard.edu.in மற்றும் nbe.edu.in ஆகிய இரண்டு இணையதளங்கள் மூலமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.

எனவே, மாணவர்கள் இரண்டு இணையதளங்களை மட்டுமே பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், சமூக ஊடகங்களை பொறுத்தவரை ஒரே ஒரு வாட்ஸ் சேனல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தர உதவி செய்தாக கூறி, பலர் முறைகேடுகள் நடைபெறுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

Also Read : ஐஐடியில் படிக்கப்போகும் முதல் பழங்குடியின மாணவி.. குவியும் பாராட்டு!

குறிப்பாக, நீட் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே பெற்றுத் தருவதாக கூறி, மோசடிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபடவதில்லை எனவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனவும் இதுபோன்று மோசடிகள் நடந்தால் புகார் அளிக்க வேண்டும் எனவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்கள் reportumc@natboard.edu.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.