Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

NASA ISRO NISAR Satellite : நாசா இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகி உள்ள நிசார் செயற்கைகோள் விண்ணில் பாய்ந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  இந்த செயற்கைக் கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கண்டறியவும், காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவு குறித்த துல்லிய தகவல்களை வழங்கும் திறன் கொண்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
நிசார் செயற்கைக் கோள்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jul 2025 18:38 PM

டெல்லி, ஜூலை 30 : நாசா இஸ்ரோ கூட்டு  (ISRO NASA) முயற்சியில் உருவாகி உள்ள நிசார் செயற்கைகோள் (NISAR Satellite) விண்ணில் பாய்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  ரூ.13,120 கோடி மதிப்பில் இந்த செயற்கோள் தயாரிக்கப்பட்டது. இது இஸ்ரோவின் மிகவும் விலை உயர்ந்த செயற்கோள் என கூறப்பட்டுள்ளது. மேலும், புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து தகவல் தரும் வகையில்  நிசார் செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் நிசார் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு இஸ்ரோ நாசா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைக் கோள் சுமார் ரூ.13,120 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள் 2,392 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோளில் உள்ள இரண்டு ரேடார் கருவிகள் மற்றும் இந்த செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. மேலும், சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவலுக்காக தொடர்பு அமைப்பு, சாலிட்ஸ் டேட் ரெக்கார்டர் இவற்றையெல்லாம் நாசா தயாரித்துள்ளது.

Also Read: இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்.. இஸ்ரோ விளக்கம்!

விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக் கோள்

இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2025 ஜூலை 30ஆம் தேதியான இன்று மாலை 5.40 மணியளவில் நிசார் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. GSLV-F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் 90 நாட்களுக்கு பிறகு, சுற்றுப்பாதையில் அதன் பணிகளை தொடங்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வகையில், நிசார் செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக் கோள் பூமியை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. பூமிமியன் ஒவ்வொரு நகர்வையும் இந்த செயற்கைக் கோள் கண்காணிக்கும். இதன் மூலம், சுற்றுச் சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவு குறித்த துல்லிய தகவல்களை இந்த செயற்கைக் கோள் மூலம் பெற முடியும்.

Also Read : வெற்றிகரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம்.. வெற்றி நாயகனாக திரும்பிய சுபன்ஷூ சுக்லா..!

மேலும், உருகும் பாறைகள், கடல் மட்டம் உயர்வு, கார்பன் சேமிப்பு, கால நிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்வதற்கு இந்த செயற்கைக் கோள் உதவுகிறது. இந்த செயற்கைக் கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கு பூமியை ஆய்வு செய்து அதனை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.