தொழில்நுட்ப கோளாறு.. பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அறிவிப்பு!
PSLV C-61 Mission Fail : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாரயணன் அறிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு மற்றும் புவிக் கண்காணிப்புக்கு EOS 09 செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து, இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

சென்னை, மே 18 : ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் (PSLV C-61 EOS 09 Mission) திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ (ISRO) தலைவர் நாரயணன் அறிவித்துள்ளார். ராக்கெட் ஏவப்பட்ட சில மணி நொடிகளிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை இஸ்ரோ கண்டுபிடித்ததை அடுத்து, இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்கு வெற்றிகரமாக பிரிந்த நிலையில், மூன்றாவது அடுக்கு பிரியவில்லை என்று மூன்றாவது அடுக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்த செயற்கைகோளை இனி பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. இந்த செயற்கைகோள் நாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது.
பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி
இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 101வது செயற்கைகோளான EOS 09 என்பதை 2025 மே 18ஆம் தேதியான இன்று காலை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் EOS 09 செயற்கைகோள் என்று ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. இந்த செயற்கைகோளை ஏவுவதற்காக இஸ்ரோ கடந் மூன்று முதல் 5 ஆண்டுகளாக அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.
ஏனென்றால் இந்த செயற்கைகோள் நாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, 1710 கிலோ எடை கொண்ட இந்த EOS 09 செயற்கைகோளில் பூமி கண்காணிப்பு திறன் கொண்டது. இந்த செயற்கை வானிலை நிலவரத்தை துல்லியமாக கணித்து விண்வெளியில் இருந்து உடனுக்குடன் தகவல்களை அனுப்பும்.
மேலும், இந்த செயற்கைகோள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அதோடு, பரந்த நிலப்பரப்பில் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். இந்தியாவின் எல்லைகள் மற்றும் கடல்யோரங்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டது.
இஸ்ரோ அறிவிப்பு
#WATCH | Sriharikota, Andhra Pradesh | On the launch of PSLV-C61, ISRO Chief V Narayanan says, “…During the functioning of the third stage, we are seeing an observation and the mission could not be accomplished. After analysis, we shall come back…”
(Source: ISRO YouTube) pic.twitter.com/XvPpo7dfbn
— ANI (@ANI) May 18, 2025
இந்த நிலையில், இந்த செயற்கைகோள் விண்ணல் ஏவுவதற்கான கவுண்ட் டவுனும் 2025 மே 17ஆம் தேதியான நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கப்பட்டது- அதனை தொடர்ந்து, 2025 மே 18ஆம் தேதியான இன்று காலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட சில மணி நொடிகளிலேயே ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பிஎஸ்விசி 16 திட்டம் தோல்வி முடிந்தது.
இதனால், செயற்கைகோள் சரியாக நிலைநிறுத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்கு வெற்றிகரமாக பிரிந்த நிலையில், மூன்றாவது அடுக்கு பிரியவில்லை என்று மூன்றாவது அடுக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.