மனைவியின் நிச்சயதார்த்த சேலையை காதலிக்கு பரிசளித்த கணவன்.. காலை முறித்த பெண் வீட்டார்!
Man Gifts Wife's Engagement Saree To Lover | பெங்களூரில் அம்பரீஸ் என்ற இளைஞருக்கு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தனது காதலியுடன் தொடர்பில் இருந்த அம்பரீஸ் மனைவியின் நிச்சயதார்த்த சேலையை தனது காதலிக்கு பரிசளித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, ஜனவரி 26 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) புறநகர் ஆனேக்கல் தாலுகா, பனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண் நந்தினி. இவருக்கும் கலகபுரி மாவட்டத்தை சேர்ந்த அம்பரீஸ் என்ற இளைஞருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தனது நிச்சயதார்த்த சேலையை அம்ரீஸ் தனது காதலிக்கு கொடுத்துவிட்டதாக அந்த பெண் தனது வீட்டாரிடம் கூற, இது தொடர்பாக இரு வீட்டார் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
மனைவியின் நிச்சயதார்த்த சேலையை காதலிக்கு கொடுத்த நபர்
அம்பரீஸ், நந்தினியை திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்பிலிருந்தே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு இடையே அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் உடனான தொடர்பை அவர் துண்டிக்காமல் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணை சந்தித்து பேசுவதை அம்பரீஸ் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியின் நிச்சயதார்த்த சேலையை அவர் தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : நாட்டின் 77வது குடியரசு தினம்.. கர்தவ்ய பாதையில் நடக்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு.. என்னென்ன சிறப்புகள்?
அம்பரீஸை தாக்கிய பெண்ணின் குடும்பத்தார்
இது குறித்து அறிந்த நந்தினி கடும் ஆத்திரமடைந்துள்ளார். அதுமட்டுமன்றி, தனது பெற்றோரிடமும் அவர் இது குறித்து கூறியுள்ளார். அதனை கேட்டு ஆத்திரமடைந்த நந்தினியின் குடும்பத்தார் அம்பரீஸை நேரில் சந்தித்து பேசுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், அம்பரீஸ் பலத்த காயமடைந்த நிலையில், அவரது கால் முறிந்துள்ளது. இது அம்பரீஸின் வீட்டாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : குடியரசு தின அணிவகுப்பு – வந்தே மாதரம் 150 ஆண்டு விழா… வேற என்ன ஸ்பெஷல்?
இந்த விவகாரம் தொடர்பாக அம்பரீஸின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இரு வீட்டாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.