வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் உணவின் தரம் மோசம்.. பயணிகள் குற்றச்சாட்டு!
Vande Bharat Sleeper Train Food Issue | ஜனவரி 17, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை, ஜனவரி 24 : இந்தியாவில் ஹவுரா மற்றும் கமாக்கியா இடையே இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் (Vande Bharat Sleeper Train) இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. இந்த ரயிலின் அட்டகாசமான வேகம் மற்றும் பயணம் அனுபவம் மட்டுமன்றி தற்போது அதன் உணவு பட்டியல் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஏராளமான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் தரமற்ற மற்றும் மிகவும் குறைவான அளவில் உணவு வழங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கி வைக்கப்பட்ட அன்றைய தினம் வழங்கப்பட்ட உணவுக்கும், அதன் பிறகு வழங்கப்படும் உணவுக்கும் தரத்தில் வேறுபாடு உள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 17, 2026 அன்று ஹவுரா மற்றும் கமாக்கியா இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயில் செல்லும் வழித்தடம் அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த ரயிலில் 16 கோச்சுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மூன்று கிளாசுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது ஏசி, இரண்டாவது ஏசி மற்றும் முதல் ஏசி என அவை பிரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : அதிவேக வந்தே பாரத் ரயில்…ரீல்ஸ்காக இளைஞர்கள் செய்த விபரீத செயல்…சமூக வலைதளங்களில் கண்டன குரல்!
வந்தே பாரத் உணவு குறித்து எழுந்த சர்ச்சை
Dinner of India’s 1st Sleeper Vande Bharat
Inaugural Journey Regular Journey pic.twitter.com/IIJTa3tRpB
— Uday Chatterjee (@UdayChatterje) January 23, 2026
பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு ஏராளமான பொதுமக்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர். அவ்வாறு பயணம் செய்யும் பலர் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் உணவின் தரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், ரயில் தொடக்க நிகழ்வு அன்று வழங்கப்பட்ட உணவுக்கும், மற்ற நாட்களில் வழங்கப்படும் உணவுக்கு பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதாகவும், வந்தே பாரத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், குறைந்த அளவிலும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை!
அவரை போலவே மேலும் சிலரும் வந்தே பாரத் ரயிலில் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.