திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்
Karnataka Murder : கர்நாடக மாநிலத்தில் திருமணமான 4 மாதங்களிலேயே பெண்ணை, அவரது கணவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணை கொலை செய்து படுக்கைக்கு அடியில் சடலத்தை வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். கொலை நடந்த மூன்று நாட்களுக்கு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்
கர்நாடக, அக்டோபர் 09 : கர்நாடக மாநிலத்தில் மனைவியை கணவர் கொலை செய்து உடலை படுக்கைக்கு அடியில் வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். வரதட்சணை கொடுமையை தனது மகள் அனுபவித்து வந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் பொலகாவி மாவட்டம் முதலகி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் கும்பர். இவரது மனைவி சாக்ஷி (20). இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்ததில் இருந்தே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆகாஷின் மும்பையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, படுக்கைக்கு அடியில் சாக்ஷி உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் சாக்ஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சாக்ஷியை அவரது கணவர் ஆகாஷ் கொலை செய்தது தெரியவந்தது. சாக்ஷியை கொலை செய்துவிட்டு, படுக்கைக்கு அடியில் உடலை மறைத்து வைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. ஆகாஷ் தனது மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
Also Read : இரவில் நாகினி பாம்பாக மாறும் மனைவி.. அதிர்ந்த கணவர்.. வினோத சம்பவம்!
திருமணமான 4 மாதங்களில் பெண்ணை கொன்ற கணவன்
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், வரதட்சணைக்காக சாக்ஷி கொல்லப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்தனர். வரதட்சணையாக எதிர்பார்த்த அளவுக்கு பணம் தரத் தவறியதால், கணவர் மற்றும் மாமியார் ஆகியோரால் பெண் சாக்ஷி துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசார் ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகளின்படி, வரதட்சணை தொடர்பான குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : இமாச்சல பிரசேதத்தில் அதிர்ச்சி.. நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு!
வரதட்சணை தொடர்பாக நாடு முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் 6,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டில் 15,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022ல் 13,479 வழக்குகளும், 2021ல் 13,568 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. வரதட்சணை வழக்குகளில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.