குறைந்த மதிப்பெண்.. பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Maharashtra Crime News : மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமியை அவரது தந்தை அடித்தே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், சிறுமியை, அவரது தந்தை அடித்தே கொலை செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபரை கைது செய்துள்ளனர்.

குறைந்த மதிப்பெண்.. பெற்ற மகனை அடித்தே கொன்ற தந்தை.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மாதிரிப்படம்

Updated On: 

24 Jun 2025 13:02 PM

 IST

மகாராஷ்டிரா, ஜூன் 24 : மகாராஷ்ராவில் 16 வயது சிறுமியை தந்தை அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், ஆத்திரத்தில் தந்தை அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியைச் சேர்ந்தவர் போன்ஸ்லே (45). இவர் தனது 16 வயது மகள் மற்றும் மனைவியுடன் சாங்கிலி பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே நேரத்தில், நீட் தேர்வு தயாராகி வந்திருக்கிறார். ஒரு பயற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். சிறுமிக்கும், அவரது தந்தை போன்ஸ்லேவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால், சிறுமி திட்டி பேன்ஸலே திட்டி வந்திருக்கிறார்.

பெற்ற மகளை கொன்ற தந்தை

இந்த நிலையில், 2025 ஜூன் 23ஆம் தேதியான நேற்று சிறுமியை போன்ஸலே அடித்தே கொலை செய்துள்ளார். அதாவது, நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் சிறுமி பெற்றிருக்கிறார்.  இதனால், ஆத்திரம் அடைந்த போன்ஸலே சிறுமியை அடித்துள்ளார்.

மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கல் அரவை இயந்திரத்தின் மரக் கைப்பிடியை எடுத்து, தாய் முன்பே சிறுமியை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரது தாய் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தன் மகளை அடித்து கொன்றதாக அவர் புகாரில் தெரிவித்தார்.

குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆத்திரம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து, 2025 ஜூன் 24ஆம் தேதி போன்ஸலே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுமி 10 ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  மேலும், மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார்.

உறுப்பினர்களின் விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறினர். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள்  ஆண்டுதோறும் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில், நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் சில விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றன. எனவே, நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரானின் நடவடிக்கையால் உலக அளவில் இண்டர்நெட் சேவை பாதிப்பு? அதிர்ச்சி தகவல்
எறும்புகளை துன்புறுத்தும் சர்ச்சை வீடியோ - நெட்டிசன்கள் எதிர்ப்பு
வங்கியின் அலட்சியத்தால் வாடிக்கையாளருக்கு ரூ. 3.21 லட்சம் இழப்பீடு
உலகின் வெப்பமான நகரங்களின் பட்டியிலில் இந்தியாவின் 19 நகரங்கள்