Crime: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
நாக்பூரில் தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், 21 வயதான ராஜா கான் பல மதுக்கடைகளில் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுடுத்தியுள்ளது. தனது ஒல்லியான உடல்வாகுவைப் பயன்படுத்தி, குறுகிய இடங்களில் நுழைந்து திருடி வந்துள்ளார். சமீபத்திய திருட்டுச் சம்பவத்தில் சிக்கிய இவர், போலீசாரிடம் தனது செயலுக்குக் காரணத்தை விளக்கியுள்ளார்.

மதுபானக்கடை கொள்ளை
மகாராஷ்ட்ரா, ஆகஸ்ட் 9: தனது தந்தையின் மரணத்திற்கு மது காரணமான நிலையில், பழிவாங்கும் நோக்கி மகன் செய்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக குற்றச்சம்பவஙகளில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் தாங்கள் ஏன் அப்படியான தவறைச் செய்தோம் என காவல்துறையினரின் விசாரணையில் தெரிவிப்பார்கள். வறுமை, பேராசை, பழிவாங்கும் நோக்கம், கோபம் என குற்றம் செய்ய ஏதாவது ஒரு காரணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அப்படியான ஒரு காரணம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வசிக்கும் 21 வயதான ராஜா கான் என்ற இளைஞருக்கும் இருந்துள்ளது. ஆனால் சற்று வித்யாசமான ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 2025 ஜூலை 31ம் தேதி அன்று நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான பாரின் திருட்டு சம்பவம் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக பார் உரிமையாளரான நிலேஷ் தேவானி என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது பாரில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போய் உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜா கான் என்று இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.36 ஆயிரம்பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜா கானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது ராஜா கானின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதுவால் தனது தந்தை மரணம் அடைந்தது மட்டுமின்றி தனது குடும்பமும் திசை மாறிப் போனது எண்ணி வருந்திய ராஜா கான் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க நினைத்தார்.
அதன்படி மதுபான கடைகள் மற்றும் பார்களில் புகுந்து பொருட்களை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தனது ஒல்லியான உடல் அமைப்பு பயன்படுத்தி திருட செல்லும் இடங்களில் குறுகிய இடைவெளிகளில் நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். இப்படியான நிலையில்தான் நாக்பூரில் உள்ள மயூரி சவுதி பாரில் நடந்த திருட்டின் போது இவர் பிடிபட்டுள்ளார்.
Also Read: காலா பட நடிகையின் சகோதரர் கொடூர கொலை… டெல்லியில் பயங்கரம்.. நடந்தது என்ன?
இதற்கு முன்பு பல மதுபான கடைகள் மற்றும் பார்களில் தான் திருடியதாகவும் ராஜா கான் ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி மதுபான கடைகளில் திருடும் ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.