உயிரியில் பூங்காவில் பயங்கரம்; சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

உயிரியில் பூங்காவில் பாதுகாப்பாக சென்ற பேருந்தின் ஜன்னல் வழியே சிறுத்தை ஒன்ற பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் ஜன்னில் பகுதி உயரத்திற்கு பாய்ந்து அந்த சிறுத்தை தாக்குதல் நடத்துவதை பின்னால் இருந்த வாகனத்தில் இருந்தபடி சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.

உயிரியில் பூங்காவில் பயங்கரம்; சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

உயிரியில் பூங்காவில் பெண்ணை தாக்கும் சிறுத்தை .

Updated On: 

14 Nov 2025 11:58 AM

 IST

கர்நாடகா, நவம்பர் 14: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்ற பெண்ணை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என எண்ணற்ற உயிரினங்கள் வசிக்கின்றன. இவற்றில் பல விலங்குகள் ஆபத்தற்றவையாக இருக்கும் அதே நேரம், சில விலங்குகள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவையாக உள்ளன. இப்படி ஆபத்தான விலங்குகளை கூட மக்கள் பார்வைக்காக தேசிய பூங்காக்கள் மூலம் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இவை பூங்காவில் உரிய மருத்துவ பாதுகாப்போடும், உரிய பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை… ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கும் வாய்ப்பு – என்ன நடக்கிறது?

என்னதான், நாம் பாதுகாப்பாக அவற்றை பராமரித்து வந்தாலும், விலங்குகள் தங்களின் இயல்பான குணத்தை அவ்வப்போது மனிதர்களிடையே வெளிப்படுத்திவிடுகின்றன. இது சில சமயங்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பன்னர்கட்ட பூங்காவில் தற்போது நிகழ்ந்துள்ளளது.

சென்னையை சேர்ந்த பெண்:

அந்தவகையில், பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சென்னையைச் சேர்ந்த வஹிதா பானு (50) என்ற பெண், அவரது கணவர் மற்றும் மகனுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பூங்காவிற்குள் வனத்துறை வாகனத்தில் விலங்குகளை பார்ப்பதற்காக சபாரி சென்றுள்ளார். அந்த வாகனம் பன்னரகட்டாவில் உள்ள வனவிலங்குகள் தாக்காத வகையில் கம்பியால் அடைக்கப்பட்ட ஜன்னல்களை கொண்டிருந்தது.

சுமார் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். பிற்பகல் 1 மணியளவில் அடர்ந்த வனப்பகுதிக்கு பேருந்து சென்றபோது அங்கு சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அதை பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததுடன் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

மேலும் படிக்க: டெல்லியைத் தொடர்ந்து சீரியல் பிளாஸ்ட்… இந்த 4 நகரங்களுக்கு டார்கெட் – வெளியான பகீர் தகவல்கள்

அப்போது, அந்த வாகனத்தில் சபாரி சென்ற வஹிதா பானு, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றுள்ளார். பாதுகாப்பாக சபாரி சென்றபோதும் கூட சிறுத்தை ஒன்று திடீரென பேருந்தின் ஜன்னல்லுக்கு அடியே நுழைய முயற்சித்துள்ளது. ஜன்னல் கம்பி வலையால் அடைக்கப்பட்டிருந்ததால், அதனால் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த வஹிதாவை காலால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை தாக்கும் வைரல் வீடியோ:

மேலும், அவரது ஆடையை பிடித்து இழுக்கவும் செய்துள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட சக பயணிகள் வஹிதாவை ஜன்னல் இருக்கையில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால், சிறுத்தையின் தாக்குதலிலிருந்து அவர் தப்பினார். எனினும், சிறுத்தையின் பாதம் மட்டும் உள்ளே சென்றதால், வஹிதா பானு லேசான காயமடைந்தார். தொடர்ந்து, அவர் ஜிகனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.