Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாலியல் துன்புறுத்தல்…. ஐடி ஊழியர் தற்கொலை – வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு

Kerala Techie Suicide Case : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியர் தனக்கு சிறுவயதில் பாலியல் தொல்லை அனுபவித்ததாக கூறி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பாலியல் துன்புறுத்தல்…. ஐடி ஊழியர் தற்கொலை – வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
தற்கொலை செய்துகொண்ட அனந்து ஆஜி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Oct 2025 13:48 PM IST

திருவனந்தபுரம், அக்டோபர் 12:   கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 26 வயது ஐடி ஊழியர் ஒருவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அவரின் கடைசி இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில் ஒரு சிலர் தன்னை சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து அஜி. இவர் திருவனந்தபுரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் தன்னை சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

இளைஞரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, அனந்து ஆஜி என்ற இளைஞர் திருவனந்தபுரம் தாம்பனூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9, 2025 அன்று மாலை அனந்தூ அஜி தற்கொலை செய்துகொண்டதாக விடுதி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இயற்கைக்கு முரணான வழக்கு என தற்போது வழக்குப் பதிவு செய்யப்ப்டடு வருகிறது என்றனர்.

இதையும் படிக்க : மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?

இன்ஸ்டாகிராமில் தற்கொலை பதிவு

அனந்து தனது மரணத்திற்கு முன்பே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை திட்டமிட்டு நேரம் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தன்னை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சிறுவயதில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் அதில் என் தற்கொலைக்கு காதல் மற்றும் பிரச்னை காரணம் அல்ல. நான் பல ஆண்டுகளாக கடும் மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டேன். அதற்காகவே இந்த முடிவை எடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நான் இப்படி முடிவு செய்தேன்,” என அனந்து எழுதியுள்ளார்.

அவர் சிறுவயதிலிருந்தே ஒரு தேசியவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததை வெளிப்படுத்தினார். வாழ்க்கையில் அவரது மன ரீதியான பிரச்னைக்கு அதுதான் காரணம். அங்குதான் அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  அவரது பதிவில்,  நான் சிறுவயதில் ​​அந்த முகாம்களில் சிலர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அனுபவித்த வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

சிறுவயதில் அனுபவித்த துன்பம்

மேலும் என் வீட்டுக்கு அருகில் வசித்தவர் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் ஒரு குழந்தையாக இருந்தபோது. என் குடும்பத்தினர் அவரை ஒரு உறவினராகக் கருதினர். ஆனால் அவர் என் முழு வாழ்க்கையையும் நாசமாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான பாலியல் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்றும், நல்லது கெட்டது தொடுதல் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் பரிந்துரைத்தார். குழந்தைகள் பயத்தால் பேச முடியாமல் போகலாம். பெற்றோர்கள் அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, அவர்கள் சுதந்திரமாகப் பேசக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

தனது முடிவு தனது சகோதரியின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று யாரும் நினைக்கக்கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)