கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
Communist Party Candidate Van Accident | கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனம் சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்துன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படாமல் அந்த பகுதி மக்கள் வேனை கயிறு மூலம் மேலே கொண்டுவந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வேன்
திருவனந்தபுரம், டிசம்பர் 07 : தமிழகத்தின் (Tamil Nadu) அண்டை மாநிலமான கேரளாவில் (Kerala) டிசம்பர் 09, 2025 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் பிரபலங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party) வேட்பாளாரின் பிரச்சார வாகனம் சாலையோரம் உள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் வேட்பாளரின் பிரச்சார வாகனம் குளத்தில் விழுந்து விபத்து
கேரள மாநிலம், நெய்யாற்றிங்கரை அருகே உள்ள திருப்புரம் பஞ்சாயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோகன்தாஸ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்திற்காக வேன் ஒன்றை பயன்படுத்தி அந்த பகுதி மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (டிசம்பர் 07, 2025) மோகன்தாசின் ஓட்டுநர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வேன் சாலை ஓரம் உள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேட்பாளரின் பிரசார வாகனம் குளத்தில் விழுந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு…என்ன காரணம்!
உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய பொதுமக்கள்
வேன் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான போது, அதில் அந்த வேட்பாளர் இல்லாமல் இருந்துள்ளார். குளத்தில் விழுந்த வேனில் ஓட்டுநர் மட்டுமே இருந்த நிலையில், வேன் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச் சென்று வேனை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதாவது வேனை கயிறு கட்டி அவர்கள் தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க : இண்டிகோ சேவை ரத்து: விண்ணை முட்டிய விமான டிக்கெட் விலை.. பயணிகள் கடும் அவதி
இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். வேன் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான தகவல் தீயாக பரவ தொடங்கிய நிலையில், அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கு கூடியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.