ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!

Jammu and Kashmir Cloud Burst | ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 14, 2025) ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு காரணமாக அங்கு 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மேக வெடிப்பு

Updated On: 

15 Aug 2025 07:21 AM

ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆகஸ்ட் 15 : ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu and Kashmir) பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 14, 2025) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக (Cloud Burst) அங்கு 46 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 46 பேர் பலியாகியுள்ளனர். இந்த மேக வெடிப்பு அங்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு

ஜம்மு காஷ்மீரின் கிறிஸ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 14, 2025) மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் 46 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பத்து பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய மேக வெடிப்பு

இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயம் அடைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக முகாம்கள், பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.

இதையும் படிங்க : அசாமில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு!

இது குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறுகையில், மச்சைல் மாதா கோவில் அருகே நடந்த இந்த மேக வெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படைகள் சிஐஎஃப், சிஆர்பிஎஃப் உள்ளிட்ட படைகளை மீட்பு மற்றும் நிவார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.