கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. கொழுந்தனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!
Wife Killed Husband With Lover Help | மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்த்தில் பரமேஸ்வர் என்ற நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில், திடீரென காணாமல் போயுள்ளார். அது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவரது மனைவியே அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

கொலை செய்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்
மும்பை, நவம்பர் 15 : மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வர். இவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வர் திடீரென மாயமாகியுள்ளார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் மாயமாகி விட்டதாக அவரது மனைவி மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அணையில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்
பரமேஸ்வரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு அணையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பரமேஸ்வரின் உடன் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்திய போலீசார், அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ஸ்கூட்டரில் சென்ற குடும்பத்தை கார் மோதி கொலை செய்ய முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
கள்ளக்காதலால் நிகழ்ந்த கொடூரம்
இதனிடையே மனிஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, மனிஷாவுக்கும் அவரது கணவரின் இளையன் சகோதரரான தியானேஸ்வர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பரமேஸ்வர் இவர்களின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கடும் கோபத்திற்கு உள்ளாகிய கள்ளக்காதல் ஜோடி, தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் பரமேஸ்வரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளது.
இதையும் படிங்க : உயிரியில் பூங்காவில் பயங்கரம்; சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
தலையில் கல்லால் தாக்கி கொடூர கொலை
அத்னபடி, அக்டோபர் 15, 2025 அன்று இரவு தியானேஸ்வர் அவரது அண்ணன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். அப்போது மனிஷா ஒரு துணியை கொண்டு தனது கணவனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் பரமேஸ்வர் துடிதுடித்து பரிதாபமாக பலியாகியுள்ளார். பிறகு இருவரும் இணைந்து அவரது உடலை ஒரு பாலித்தின் பையில் கட்டி அணையில் வீசியுள்ளனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனிஷா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.