பாம்பு கடித்த குழந்தைகள்.. உயிர் பிழைக்க மாந்த்ரீக பூஜை.. அடுத்து நடந்த ஷாக்!

odisha Crime News : ஒடிசாவில் பாம்பு கடித்து 9 மாத குழந்தை மற்றும் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தைகளை பாம்பு கடித்துள்ளதை அடுத்து, பெற்றோர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், உயிர்பிழைக்க அவர்களை மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடித்த குழந்தைகள்.. உயிர் பிழைக்க மாந்த்ரீக பூஜை.. அடுத்து நடந்த ஷாக்!

மாதிரிப்படம்

Updated On: 

10 Sep 2025 08:53 AM

 IST

ஒடிசா, செப்டம்பர் 10 : ஒடிசா மாநிலத்தில் பாம்பு கடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, குழந்தைகளை பாம்பு கடித்ததும், பெற்றோர் விஷத்தை எடுக்க மந்திரவாதியிடம் அழைத்து சென்ற நிலையில், விஷம் உடல் முழுவது பரவி குழந்தைகள் உயிரிழந்தனர். ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உமர்கோட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் க்ருஷா ஹரிஜன். இவர் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவருக்கு 9 மாத குழந்தை ரிதுராஜ் ஹரிஜன் மற்றும் 11 வயதில் அமிதா ஹைரிஜன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 9ஆம் தேதியான நேற்று இரவில் இவர்கள் அனைவரும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 9 மாத குழந்தை மற்றும் 11 வயது சிறுமியை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறிய குழந்தைகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், பெற்றோர் மூட நம்பிக்கை என்ற பெயரில் அந்த பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். அங்கு இரண்டு குழந்தைகளின் உடம்பில் இருக்கும் விஷயத்தை எடுத்து, அவர்களை உயிர் பிழைக்க செய்வதாவும் மந்திரவாதி கூறியிருக்கிறார். இதனை அடுத்து, இரண்டு குழந்தைகளுக்கு வைத்து மந்திரவாதி சடங்குகளை மேற்கொண்டார். இந்த சடங்குகள் நள்ளிரவு 12 மணி முதல் மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.

Also Read : என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

பாம்பு கடித்து இரண்டு குழந்தைகள் பலி

ஆனால், குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை. மயங்கிய நிலையிலேயே இருந்தனர். இதனை அடுத்து, அதிகாலை 4 மணிக்கு குழந்தைகளை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். விஷம் உடல் முழுவதும் பரவி குழுந்தைகள் உயிரிழந்ததாக கூறினர்.

இதுகுறித்து நபரங்பூர் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி (CDMO) சந்தோஷ் குமார் பாண்டா கூறுகையில், “அந்தக் குழந்தைகளை மிகவும் விஷமுள்ள பாம்பு கடித்துவிட்டது. அவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்குள் விஷ எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் பெற்றோர் செய்யவில்லை. மூட நம்பிக்கை பெயரில் அவர்கள் மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர்.

Also Read : நிலத்தகராறு.. பெண்ணின் சேலையை உருவி கடுமையாக தாக்கிய குடும்பத்தினர்!

இதுபோன்ற நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இதுபோன்ற மூடநம்பிக்கைகளைத் தடுக்க கிராமங்களில் ஒரு பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஆனால் மக்கள் இன்னும் முழுமையாக விழிப்புணர்வு பெறவில்லை” எனக் கூறினார். ஆணையர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலத்தில் ஆண்டுதோறும் சுமார் 3,000 பாம்புக்கடி வழக்குகள் பதிவாகின்றன. மேலும் அவர்களில் 40 சதவீதம் பேர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படாததால் இறக்கின்றனர்” என்றார்.