என்.டி.ஏ கூட்டணி எம்பிக்களுக்கு இரவு சிறப்பு விருந்து வழங்கிய பிரதமர் மோடி!
Special Dinner For NDA MPs | பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் காரணமாக என்.டி.ஏ கூட்டணி எம்பிக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பு இரவு உணவை வழங்கினார்.

என்.டி.ஏ கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு விருந்து
புதுடெல்லி, டிசம்பர் 12 : பீகார் சட்டமன்ற தேர்தலில் (Bihar Assembly Election) நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு முன்னதாக அங்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் என்.டி.ஏ (NDA – National Democratic Alliance) கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு இரவு உணவு வழங்கிய பிரதமர்
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் காரணமாக, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாய கூட்டணியை சேர்ந்த நாடாளும்னற உறுப்பினர்களுக்கு சிறப்பு இரவு விருந்தை வழங்கினார். இதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இந்த இரவு உணவு வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த சிறப்பு இரவு விருந்து ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : இந்திய குடியுரிமை பெறும் முன்பே, வாக்களார் பட்டியலில் சோனியா காந்தி பெயர்… அமித் ஷா குற்றச்சாட்டு
54 மேஜைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரம்மாண்ட விருந்து
PM Narendra Modi tweets, “Was a delight to have hosted NDA MPs for dinner at 7, Lok Kalyan Marg this evening. The NDA family represents a shared commitment to good governance, national development and regional aspirations. Together, we will continue working to strengthen our… pic.twitter.com/DR1YHEka66
— ANI (@ANI) December 11, 2025
இந்த சிறப்பு விருந்துக்காக மொத்தம் 54 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் பாஜக எம்பிக்கள் உட்பட 8 எம்பிக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரவு உணவில் கலந்துக்கொண்ட அனைத்து எம்பிக்களுடனும் பிரதமர் மோடி உரையாற்றினார்.