ஐரோப்பாவில் லாத்வியா என்ற நாட்டில், ஆண்கள் குறைவாக இருப்பதால், 'ஒரு மணி நேர கணவர்' என்ற சேவையை பயன்படுத்தி, பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய வைக்கிறார்கள். லாத்வியா நாட்டில் தற்போது பெண்கள் எண்ணிக்கை, ஆண்களை விட 15 சதவிகிதம் அதிகம். எனவே, நாட்டில் பாலின சமநிலை சீர்குலைந்துள்ளது என்று யூராஸ்டேட் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில், பெண்கள் எண்ணிக்கை, ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம். இதனால் அங்குள்ள தினசரி வாழ்க்கையிலும், அலுவலகங்களிலும், ஆண்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இது குறித்து டேனியா என்ற பெண், நான் வேலை பார்க்கும் என்னுடன் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான்.