SIR Deadline: எஸ்ஐஆர் பணிக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம்.. காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்!
EC Extends SIR Deadline: உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் பணிகளுக்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு (TamilNadu), கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் (SIR) பணிகளுக்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான படிவங்களை சமர்ப்பிக்க 2025 டிசம்பர் 11ம் தேதியான இன்றே கடைசி நாளாக இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்தது. இதனை தொடர்ந்து படிவ டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமர்ப்பிப்பின் முன்னேற்றத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி முதல் மதிப்பாய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளா உள்பட 6 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக காலக்கெடுவை ஒரு வாரத்திற்கு நீட்டித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
ALSO READ: எஸ்ஐஆர் வழக்கு: ஜனவரி இறுதியில் தீர்ப்பு.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
எஸ்.ஐ.ஆர் காலக்கெடு நீட்டிப்பு:
#SIR date extended again by #ElectionCommissionOfIndia pic.twitter.com/hd73c0tvPe
— Ashwine kumar singh (@AshwineSingh) December 11, 2025
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தின்போது, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கான எஸ்.ஐ.ஆர் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணைய வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டாரங்களின்படி, காலக்கெடு நீட்டிக்கப்படக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடும், மேற்கு வங்கமும் அடங்கும். முன்னதாக, கேரளாவிற்கான காலக்கெடுவை 2025 டிசம்பர் 11 முதல் 2025 டிசம்பர் 18 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்திருந்தது.
2025 நவம்பர் 30 முதல் எஸ்.ஐ.ஆர் காலக்கெடு நீட்டிப்பு:
முன்னதாக, கடந்த 2025 நவம்பர் 30ம் தேதி எஸ்.ஐ.ஆர் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. இதனை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியலானது 2026 பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு 2025 டிசம்பர் 18ம் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பதிலாக வருகின்ற 2025 டிசம்பர் 23ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உத்தரபிரதேசம் தனது எஸ்.ஐ.ஆர் படிவங்களை 2025 டிசம்பர் 31 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக, 2025 டிசம்பர் 26ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ALSO READ: தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!!
கால நீட்டிப்பு ஏன்..?
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பெறுவதற்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அதிக சுமையை ஏற்படுத்து வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நீட்டிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.



