எறும்புகளைப் பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரியாது. ஆனால் எறும்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் இளம் எறும்புகள், தங்கள் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்படும் போது, ஒரு ரசாயன கலவையை உற்பத்தி செய்து உடலில் இருந்து ஒரு வகையான வாசனையை வெளிப்படுத்துகின்றன. இந்த வாசனையின் மூலம், தங்களை கொல்லச் சொல்லி சிக்னல் கொடுக்கும். அதாவது, அந்த நோய் பிற எறும்புகள் அல்லது எறும்புக் காலனிகளுக்கு பரவாமல் இருக்க இதைச் செய்கின்றன.