இந்திய எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்?.. ராணுவம் விளக்கம்!

Indian Army Explained to Ceasefire Violation News | ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது இந்த நிலையில், ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்?.. ராணுவம் விளக்கம்!

கோப்பு புகைப்படம்

Published: 

06 Aug 2025 08:43 AM

ஸ்ரீநகர், ஆகஸ்ட் 06 : ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) மீறி நேற்று (ஆகஸ்ட் 05, 2025) பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இணையத்தில் வெளியான அந்த தகவல் குறித்து கூறியுள்ள இந்திய ராணுவம், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் (India – Pakistan Border) போர் நிறுத்தத்தை மீறி எந்த வித தாக்குதலும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் தாக்குதல்? – வைரலான தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) எதிரொலியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையெ ஒருசில நாட்கள் மோதல் நீடித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவு, இந்த தாக்குதல் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகின.

இதையும் படிங்க : Air India : விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

எல்லையில் தாக்குதல்? – இந்திய ராணுவம் விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பூஞ்ச் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் எந்த போர் நிறுத்த விதிமுறைகளும் நடக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.