இந்தியா-ஐரோப்பா இடையே 10 முக்கிய ஒப்பந்தம்…இன்று அறிவிப்பு வெளியாகிறது!

India- EU Agreements: இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தம் சார்ந்த 10 முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது .

இந்தியா-ஐரோப்பா இடையே 10 முக்கிய ஒப்பந்தம்...இன்று அறிவிப்பு வெளியாகிறது!

இந்திய-ஐரோப்பா முக்கிய ஒப்பந்தங்கள்

Published: 

27 Jan 2026 11:12 AM

 IST

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க 10 மெகா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகமான வரி விதிப்பால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்தியா- ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தம் வெளியாக உள்ளது. இதில், பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்த இரு தரப்பு உறவுகளை ஆளப்படுத்துவதில் எஃப் டி ஏ ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தின் ஒட்டு மொத்த கவனம் வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதிகள் சார்ந்த உலகளாவிய ஒழுங்கை வலுப்படுத்துதல் ஆகியவை இருக்கும்.

மேலும் படிக்க: “வாரம் 2 நாள் விடுமுறை வேண்டும்” நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. தனியார் வங்கி சேவை பாதிக்குமா?

  • இரு தரப்பினரும் ஒரு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் ஒரு மூலோபாய நிகழ்ச்சி நிரலை வெளியிட உள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, பிற பிராந்தியங்களுடனான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த கூட்டான்மை உருவாகி உள்ளது.
  • இந்த உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாே ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.
  • கடந்த வாரம் வான் டெர் லேயன், இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இது 2 பில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு சந்தேக உருவாக்கும் என்றும், ஒட்டுமொத்த உலக உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
  • இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் மூலோபாய பங்காளிகளாக உள்ளனர். முன்மொழியப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை இரு நாடுகளுக்கு இடையே ஆழமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை எளிதாக்கும்.
  • பாதுகாப்புத் துறையில் இயங்கு தன்மை, பாதுகாப்பு கூட்டாண்மை ஆகியவற்றை கொண்டு வரும், மேலும், இந்திய நிறுவனங்கள் ஐரோப்பாவின் SAFE திட்டத்தில் பங்கேற்க வழிகளை உண்டாக்கும். ( ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கை). SAFE என்பது ஐரோப்பாவின் 150 பில்லியன் யூரோ நிதி கருவியாகும். இது பாதுகாப்பு தயார் நிலையில் விரிவுபடுத்த தோழமை நாடுகளுக்கு நிதியும் உதவியாக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதன் முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன. பின்னர், 2013 ஆம் ஆண்டு சில காரணங்களால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, கடந்த 2022 இல் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
  • இந்திய தொழிலாளர்கள் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வதை எளிதாக்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த உச்சி மாநாட்டில் மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள் உயர்ந்து வருகின்றன. ஒரு கூட்டமைப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு வர்த்தக பங்காளி ஆகவும் இருந்து வருகிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் மொத்த சரக்கு வர்த்தகம் சுமார் 136 பில்லியன் மதிப்பாகவும், ஏற்றுமதி சுமார் 76 பில்லியன் மற்றும் இறக்குமதி 60 பில்லியனாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பரிக்ஷா பே சர்ச்சா 2026: அகில இந்திய அளவில் மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.. 4.5 கோடி பேர் பதிவு!

வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த தங்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
மம்மூட்டியின் பாதயாத்ரா படம்.. கொச்சியில் தொடங்கிய படப்பிடிப்பு..
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை நோட் பண்ணுங்க..
குடியரசு தின விழா - ஆண்கள் மட்டுமே உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைமை தாங்கும் பெண் அதிகாரி