திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்.. மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

Groom Weds Bride In Hospital | கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக மணமகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் அவரை மருத்துவமனையிலே வைத்து திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்.. மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

மருத்துவமனையில் நடந்த திருமணம்

Published: 

22 Nov 2025 10:25 AM

 IST

ஆலப்புழா, நவம்பர் 22 : கேரள (Kerala) மாநிலம் ஆலப்புழா (Alappuzha) மாவட்டம் தும்பேலி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகள் ஆவணி என்ற 25 வயது இளம் பெண்ணுக்கும், தும்பேலி பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரில் பேராசிரியரான ஷாரோன் என்ற 32 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி திருமண ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. திட்டமிட்டபடி இவர்களின் திருமணம் ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று (நவம்பர் 21, 2025) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு முன்பாக விபத்தில் சிக்கிய மணமகள்

திருமணத்திற்கு முன்னதாக மணமகள் ஆவணி ஒப்பனை செய்தற்காக தனது அத்தையுடன் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். காரை மணமகளின் அத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் மரத்தின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மணமகள் ஆவணி மற்றும் அவரது அத்தை இருவரும் காயமடைந்தனர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதித்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக மணமகள் விபத்தில் சிக்கியது இரு வீட்டாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!

மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

மணமகளுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமகன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைண்துள்ளார். அப்போது மருத்துவமனையிலே வைத்து அவர் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மண்டபத்தில் திருமணத்திற்காக வந்த உறவினர்களை இரு வீட்டாரும் உணவு வழங்கி கவனித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு மணமக்கள் இல்லாமலே திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 8 பிள்ளைகள்.. குடும்ப வறுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை.. சோக சம்பவம்!

திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கி மணமகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையிலே வைத்து மணமகன் அந்த பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ரூ.10 கோடி காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
விஜய் தேவரகொண்டா பற்றி மறைமுகமாக பேசிய ரஷ்மிகா
கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி யானை - 3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்பு