இந்தியாவில் மருந்துகள் விலை இவ்வளவா.. அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு பெண்.. வீடியோ வைரல்!

India Medicine Prices : இந்தியாவில் மருந்துகள் விலைகள் குறைவாக இருப்பதாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நான் இந்தியாவில் குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமூவக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது .

இந்தியாவில் மருந்துகள் விலை இவ்வளவா.. அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு பெண்.. வீடியோ வைரல்!

இந்தியாவில் மருந்து விலை இவ்வளவா

Published: 

29 Mar 2026 21:14 PM

 IST

உலகை சுற்றி பார்ப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்த பேக்பேக்கர்ஸ் இனஸ் ஃபாரியா என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர், கேரளாவின் மன்றோர் தீவில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு இருமல் மருந்து வாங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது அந்த மருந்தகத்தில் இருந்த பெண் இருமல் மருந்து மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.252 இன்று அந்த பெண் கூறினார். இந்த விலையை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த பாரியா இந்த ஒரு காரணத்திற்காக நான் நிரந்தரமாக இந்தியாவில் குடிபெயர்ந்து விடலாம் என்று கூறினார். ஏனென்றால், வெளிநாடுகளை விட இந்தியாவில் மருந்துகளின் விலை குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த வெளிநாட்டு பெண் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகள்

அந்த வீடியோவில் நான் இந்தியாவில் ஒரு மருந்தகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு விலைகள் என்னை அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளன மருந்துகளின் விலை குறைவாக உள்ளது என்று அந்த வீடியோவில் வெளிநாட்டு பெண் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தால் இந்த மருந்தை இன்னும் மலிவான விலையில் பெற்றிருக்க முடியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: அழகி போட்டியில் திடீரென கழன்ற செயற்கை பற்கள்.. தன்நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தாய்லாந்து அழகி!

கேரளா அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்து

மற்றொரு நபர் கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நீங்கள் செல்லலாம் அங்கு மருந்துகள் முற்றிலும் இலவசம் என்று கூறியிருந்தார். இதற்கு மற்றொரு நபர் அது சற்று விலை அதிகம் என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா இல்லை மற்றவர்களுக்கும் அப்படி தோன்றுகிறதா என்று கூறினார். இதே போல, 3- ஆவது நபர் நீங்கள் வாங்கியது ஒரு பிராண்டட் இருமல் மருந்து. அது மலிவானது என்று நீங்கள் நினைத்தால் அது மருந்துகளை அரசு மானியம் பெறும் மருந்துகளில் வாங்கலாம்.

பொதுவான வீட்டு வைத்தியத்தை உபயோகிக்கலாம்

மறுபுறம் அரசு, மருத்துவ நிலையங்கள், அல்லது அரசு நடத்தும் மருத்துவமனைகளில் மருந்துகளை நீங்கள் மருந்துகளை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல 4- ஆவது நபர் நீங்கள் இந்தியாவில் இருந்தால் இருமலுக்கு ஒரு தேக்கரண்டி தேனும் ஒரு சிட்டிகை மிளகு தூளையும் கலந்து பயன்படுத்துவது ஒரு பொதுவான வீட்டு வைத்தியமாகும். தொண்டையில் வலி இருந்தால் சுடு தண்ணீரில் கல் உப்பை போட்டு வாய் கொப்பளியுங்கள் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படுக்க: “இந்திய மக்களுக்கு நன்றி”.. இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் மூலம் உலக நாட்டு மக்களுக்கு ஈரான் நன்றி!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..