IPL 2026: ரோஹித் ருத்ர தாண்டவம்.. எகிறி அடித்த ரியான்.. தோல்வியில் துவண்ட கொல்கத்தா!
MI vs KKR Match Highlights: முதலில் பேட்டிங் செய்த கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் அதிரடி உதவியுடன் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் அதிரடி உதவியுடன் 221 ரன்களை 5 பந்துகள் மீதம் வைத்து இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி துரத்திய மிகப்பெரிய இலக்கு இதுவாகும். மும்பை அணியில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 81 ரன்களும், ரோஹித் சர்மா (Rohit Sharma) 78 ரன்களும் எடுத்திருந்தனர்.
ALSO READ: மீட்டிங் தவிர்ப்பு.. அணியுடன் பயணம் இல்லை.. ஐபிஎல் 2026ல் இருந்து விலகுகிறாரா தோனி?
220 ரன்கள் குவித்தும் வீண்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களின் உதவியுடன் 67 ரன்கள் குவித்து, அணிக்காக சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இது தவிர, அணிக்காக 4வது இடத்தில் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 51 ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் மும்பை அணிக்காக அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




221 ரன்கள் இலக்கு:
மும்பை இந்தியன்ஸின் தொடக்க ஜோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அபாயகரமாக அமைந்தது. ரோஹித் 23 பந்துகளிலும், ரிக்கி பாண்டிங் 24 பந்துகளிலும் தங்களது அரைசதத்தை எட்டினர். இருவரும் சேர்ந்து வெறும் 11.5 ஓவர்களில் 148 ரன்கள் என்ற பிரமிக்க வைக்கும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை திணற செய்தனர். தொடர்ந்து, ரோஹித் சர்மா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 78 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து போட்டியை முடித்தனர்.
ALSO READ: சிஎஸ்கே அணிக்கு மற்றொரு சிக்கல்.. காயத்தில் சிக்கிய பிரெவிஸ்..!
14 சீசன்களுக்கு பிறகு..
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய ரன் சேஸிங் இதுவாகும். இதற்கு முன்பு, அந்த அணி 219 ரன்கள் என்ற இலக்கை எட்டியிருந்தது. மேலும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு, ஐபிஎல் 2012-ல் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி மும்பை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. அதன்பிறகு, அந்த அணி தொடர்ச்சியாக 13 சீசன்களில் தங்களது தொடக்கப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.