துப்பாக்கி முனையில் மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலன்.. பகீர் சம்பவம்!

Ex Lover Abducted Bride After Marriage | ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் பகுதியில் திருமணம் முடிந்து உறவினர்களுடன் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்த மணமகளை அவரது முன்னாள் காதலன் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி முனையில் மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலன்.. பகீர் சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Feb 2026 20:35 PM

 IST

புவனேஷ்வர், பிப்ரவரி 22 : ஒடிசா (Odisha) மாநிலம், போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்ற நபருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அந்த இருவருக்கும் இன்று (பிப்ரவரி 22, 2026) காலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான், மணமகளை அவரது முன்னாள் காதலன் கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலன்

திருமணம் முடிந்த கையோடு மணமகளும், மணமகனும் அவர்களது உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தர்பா சாலை வழியாக சென்றுக்கொண்டு இருந்தபோது அவர்களின் வாகனத்தை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மறித்துள்ளது. அவர்கள் கைகளில் துப்பாகிகளை வைத்திருந்த நிலையில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி குடும்பத்தாரை மிரட்டி, மணப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளது.

இதையும் படிங்க : நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

வலைவிசி தேடி வரும் போலீசார்

துப்பாக்கி முனையில் மணப்பெண் கடத்திச் செலப்பட்டதை கண்டு மணமகன் மற்றும் குடும்பத்தார் செய்வது அரியாது திகைத்து போய் நின்றுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதன்படி, மணப்பெண்ணை கடத்திச் சென்றது அவரது முன்னாள் காதலன் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!

உண்மை அறிந்து மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணப்பெண்ணை கடத்திச் சென்ற அவரது முன்னாள் காதலன் மற்றும் கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
“மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!
லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்
நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!