Zoho : அரசு அலுவலகர்கள் இனி சோஹோ ஆஃபிஸ் பயன்படுத்த வேண்டும் – மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
Zoho office: இனி அரசு அலுவலர்கள் அனைவரும் அலுவலக பணிகளுக்கு சோஹோ ஆஃபிஸ் சூட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய கல்வி அமைச்சகம் (Education Ministry) மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில் இனி அனைத்து அரசு அலுவலர்களும் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளை சோஹோ ஆஃபிஸ் சூட் (Zoho Office Suite) மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரத்’ (Atmanirbhar Bharat) முயற்சியுடன் இணங்கும் வகையில், இந்தியாவில் உருவாக்கப்படும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவு
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்ககையில், Zoho Office Suite என்ற டூலைப் பயன்படுத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மென்பொருட்களின் மீதான பயன்பாட்டைக் குறைத்து, இந்தியாவின் டிஜிட்டல் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சோஹோ போன்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட அலுவலக கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் நாட்டு திறமையை நம் நம்பி வளர்ச்சியடைவது இதன் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பீகார் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
அதிகாரப்பூர்வ வேலைகள் அனைத்துக்கும் இனி சோஹோ பயன்படுத்த வேண்டும்
இனி கல்வி அமைச்சகத்தின் கீழ் வேலை செய்யும் அனைத்து பணியாளர்கள் அனைவரும் டாக்குமென்ட்கள், பிரசன்டேஷன், எக்சல் செயல்பாடுகள் ஆகியவற்றை சோஹோ ஆஃபிஸ் சூட் வழியாகமட்டுமே உருவாக்க வேண்டும். அதே போல அனைத்து வேலைகளையும் அதன் மூலமே செய்ய வேண்டும். மேலும் என்ஐசி மெயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இதற்காக தனியாக எந்த சாஃப்ட்வேரையும் உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை எனவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சோஹோ ஆஃபிஸ் சூட் என்றால் என்ன?
ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான சோஹோ கார்பரேஷன் உருவாக்கிய சோஹோ ஆஃபிஸ் சூட் என்பது ஒரு அலுவலக பயன்பாட்டுக்காக வடிவைக்கப்பட்ட ஒரு பிரத்யேக மொன்பொருள் ஆகும். இதில் சோஹோ ரைட்டர் (Zoho Writer), சோஹோ ஷீட் (Zoho Sheet), சோஹோ ஷோ (Zoho Show) என மூன்று முக்கிய கருவிகள் உள்ளன.
- இதில் சோஹோ ரைட்டர் என்பது ஆவணங்களை உருவாக்க பயன்படும்.
- சோஹோ ஷீட் என்பது விண்டோஸில் உள்ளது போல எக்செல் ஷீட் தயாரிக்க உதவும்.
- சோஹோ ஷோ என்பது பிரசண்டேஷன்களை தயாரிக்க உதவும்.
இதையும் படிக்க : அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.. காசாவில் போர் நிறுத்தம் உருவாகும் சூழலில் பிரதமர் மோடி பதிவு!
மேலும் நம் பணிகள் அனைத்தும் சோஹோ வொர்க்டிரைவ் என்ற கிளவுட் தளத்தில் சேமிக்கப்படும். இது கூகுள் டிரைவ் போல செயல்படும். இதனால் பணியாளர்கள் எங்கு இருந்தாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் வேலைகளை ஆன்லைனில் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களைப் போல அரசு அலுவலர்களும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் வீட்டில் இருந்தபடி பணியாற்றலாம்.